அலெனுழ்சு தேரியான்

அலெனுழ்சு தேரியான் (Ālenush Teriān) (ஆர்மீனியம்: Ալենուշ Տէրեան; பாரசீக மொழி: آلنوش طریان; also: آلنوش تریان‎; நவம்பர் 9, 1920 – மார்ச்சு 4, 2011), ஓர் ஈரானிய அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் ஈரானிய வானியலின் தாயாகப் போற்றப்படுகிறார்.[1]

அலெனுழ்சு தேரியான்
Alenoush Terian
அலெனுழ்சு தேரியான்
பிறப்பு(1920-11-09)9 நவம்பர் 1920
தெகுரான், ஈரான்
இறப்பு4 மார்ச்சு 2011(2011-03-04) (அகவை 90)
தெகுரான், ஈரான்
Resting placeதவுலபு கல்லறை
வாழிடம்தெகுரான், ஈரான்
தேசியம்ஈரானிய அமெரிக்கர்
துறைஇயற்பியல், வானியல்
கல்வி கற்ற இடங்கள்தெகுரான் பல்கலைக்கழகம், சோர்பான் பல்கலைக்கழகம்
Academic advisorsகல்லோதின் யெனாபு
அறியப்படுவதுநிகழ்கால ஈரானிய வானியலின் தாய்

இளமை

தொகு

இவர் ஈரானில் இருந்த ஈரானிய ஆர்மேனியக் குடும்பத்தில் தெகுரானில் பிறந்தார்.[2] இவரது தந்தையார் ஆர்த்தோ ஒரு நாடக மேடை இயக்குநரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது புனைபெயர் ஆரியருக்குப் பிறந்த எனப் பொருள்படும் ஆரிசாத் ( Arizad) என்பதாகும். இவர் சானாமெகுவை பாரசீக மொழியில் இருந்து ஆர்மேனிய மொழிக்கு பெயர்த்தார்.[3][4] and her, Vartu, mother and stage actress and director.[5]

கல்வி

தொகு

இவர் தெகுரான் பல்கலைக்கழக அறிவியல் துறையில் 1947 இல் இளவல் பட்டம் பெற்றார். இவர் தன் பணியை அப்பல்கலைக்கழக இயற்பியல் ஆய்வகத்தில் தொடங்கினார். அந்த ஆண்டிறுதிக்குள்ளாக ஆய்வகச் செயல்பாடுகளின் தலைவர் ஆனார்.

இவர் பிரான்சு நாட்டு ஆய்வுநல்கைக்காக்க் கையெழுத்திட்டார். ஆனால், மகம்மது கெசாபி இதை ஏற்கவில்லை. பெண்கள் இந்த அளவுக்குப் படைத்த்தே போதுமென கருதியுள்ளார்.[3]

கடைசியாக இவர் பிரான்சு செல்ல, தன் தந்தையின் நிதி உதவியுடன் ஈரானில் இருந்து புலம்பெயர்ந்தார். அங்கு இவர் 1956 இல் தன் முனைவர் பட்டத்தை சோர்பான் பல்கலைக்கழகத்தில் வளிமண்டல இயற்பியலில் பெற்றார். பிறகு இவர் ஈரானுக்குத் திரும்பி, தெகுரான் பல்கலைக்கழகத்தில் வெப்ப இயங்கியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஆனார். பின்னர், நான்கு மாதங்களுக்கு மேற்கு செருமனியில் சூரிய இயற்பியல் துறையில் செருமனி அரசு தெகுரான் பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய ஆய்வுநல்கையுடன் பணிபுரிந்தார். இவர் 1964 இல் ஈரானில் முதல் பெண் இயற்பியல் பேராசிரியர் ஆனார்.

பேராசிரியர் தேரியான் 1966 இல் தெகுரான் பல்கலைக்கழகத்தின் புவியியற்பியல் குழுவின் உறுப்பினர் ஆனார். இவர் 1969 இல் இப்பல்கலைக்கழகச் சூரிய இயற்பியல் ஆய்வின் தலைமைக்குத் தேர்வு செய்யப்பட்டார். பிறகு சூரிய வான்காணகத்தில் பணிபுரியலானார். மேலும் இவர் இந்த வான்காணக நிறுவனர்களிலும் ஒருவராவார். இவர் 1979 இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தெகுரானில் இறந்தார்.[6]

பேராசிரியர் தேரியான் 90 ஆம் பிறந்தநாள் விழாவில் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஈரானிய ஆர்மேனியர்களும் கலந்துகொண்டனர்.[7]

தேரியான் 2011 மார்ச்சு 4 இல் இறந்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "پیکر 'مادر نجوم ایران' تشییع شد". BBC Persian. பார்க்கப்பட்ட நாள் 2013-04-09.
  2. Interview with Alenoush Terian, Farsnews Wire Service பரணிடப்பட்டது 2017-10-23 at the வந்தவழி இயந்திரம்.
  3. 3.0 3.1 "An interview with Alenoush Terian". www.farheekhtegan.ir (in பெர்ஷியன்). Archived from the original on 2012-08-01.
  4. Janet D. Lazarian (2003). Encyclopedia of Iranian Armenians. Tehran: Hirmand Publisher. p. 426. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 964-6974-50-3.
  5. Janet D. Lazarian (2003). Encyclopedia of Iranian Armenians. Tehran: Hirmand Publisher. p. 427. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 964-6974-50-3.
  6. Alenoush Terian's Page in the Persian Wikipedia.
  7. The Mother of the Iranian Astronomy honoured பரணிடப்பட்டது 2010-11-13 at the வந்தவழி இயந்திரம்.
  8. Iran’s First Female Astronomer Alenoush Terian Passes Away பரணிடப்பட்டது 2011-03-11 at the வந்தவழி இயந்திரம், The Armenian Weekly (March 5, 2011)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெனுழ்சு_தேரியான்&oldid=3791686" இலிருந்து மீள்விக்கப்பட்டது