அலைன் வோங்

சிங்கப்பூர் சமூகவியலாளர் மற்றும் அரசியல்வாதி

அலைன் வோங் (Aline Wong)என்பவர், சிங்கப்பூரைச் சார்ந்த ஒரு சமூகவியலாளர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி ஆவார். இவர், 1984 ம் ஆண்டு சிங்கப்பூரில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இவர் அரசியல் மற்றும் கல்வி ஆகிய இரண்டிலும் பணி செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில், இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் சமூகத்திலும் கல்வியிலும் தொடர்ந்து தீவிரமாக இருந்தார். மேலும், சிம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து, சிங்கப்பூரில் அதிபர் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் 2015 ஆம் ஆண்டில் பெற்றார் .

சுயசரிதை

தொகு

அலைன் வோங், 1941ம் ஆண்டு, சீனாவிலுள்ள ஹாங்காங்கில் கன் லாய் சுங் என்னுமிடத்தில் [1] பிறந்தார்.[2]

அலைன் வோங் இளமையில் சமூகவியலைத் தேர்ந்தெடுத்துப் படித்தார் மற்றும் சிங்கப்பூரில் குடும்பங்கள் மாறிக்கொண்டிருக்கும் விதம், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பெண்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பது தொடர்பான பிரச்சினைகளில் பணியாற்றினர்.[2]

அலைன் வோங் 1971 இல் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் (என்.யு.எஸ்.) விரிவுரையாளராக தனது கல்வி வாழ்க்கையைத் தொடங்கினார். வோங் மற்றும் விவியென் வீ ஆகியோர் இணைந்து, 1987 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் முதல் பாலின ஆய்வு வகுப்பைத் தொடங்கினர். வோங் 2002 இல் ஜான் எஃப் கென்னடி அரசு பள்ளியில் சக ஊழியராக பணியாற்றினார். மேலும், 2005 முதல் சிம் பல்கலைக்கழகத்தின் (யுனிசிம்) கல்வி ஆலோசகராக பணியில் அமர்த்தப்பட்டார்.[3] 2015 ஆம் ஆண்டில், யுனிசிம் அதிபராக பெயரிடப்பட்ட முதல் பெண்மணியாகவும், சிங்கப்பூர் முழுவதும் ஒப்பிடுகையில் கல்வியில் முதல் பெண் அதிபராகவும் அறியப்படுகிறார்.

1984 ஆம் ஆண்டில், அலைன் வோங், டிக்ஸி டான் மற்றும் யூ-ஃபூ யீ ஷூன் ஆகியோர் சிங்கப்பூரின் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்கள் என்ற பெருமையைப் பெற்றனர்.[2][4] வோங் மக்கள் நடவடிக்கைக் கட்சியின் (பிஏபி) உறுப்பினராக இருந்தார், மேலும் சாங்கட் ஒற்றை உறுப்பினர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

1988ம் ஆண்டு முதல் 2001 வரை, இவர் டாம்பைன்ஸ் ஜி.ஆர்.சி. பாராளுமன்றத்தில், பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கும், பொது வாழ்க்கையில் பெண்களின் சமத்துவத்திற்காக வாதிடுவதற்கும் இவர் பணியாற்றினார். மக்கள் செயல் கட்சியின் மகளிர் பிரிவு 2001 வரை அலைன் வோங்கால் நடத்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் வோங் சுகாதார அமைச்சராக பணியாற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த மாநில அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார், அங்கு இவர் கல்வித் துறையில் கவனம் செலுத்தினார். 2001ம் ஆண்டு வரை, இவர் அரசியலில் பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றார்.

மேலும், இவர் 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளுக்கு இடையில் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தில் (எச்.டி.பி.) தலைவராக பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டில் குழந்தைகளில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (ஏ.சி.டபிள்யூ.சி) தொடர்பான ஆசியான் ஆணையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பெண்கள் உரிமை பிரதிநிதியாக அலைன் வோங் அனுப்பப்பட்டார்.

2014 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மகளிர் மண்டபத்தில் அலைன் வோங் சேர்க்கப்பட்டார்.[2]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Portrait of Dr. Aline Wong, former Member of Parliament for Changkat". BookSG - National Library Board, Singapore. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  2. 2.0 2.1 2.2 2.3 "Aline Wong". Singapore Women's Hall of Fame (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  3. Yeo, Sam Jo (2015-09-25). "SIM University appoints first female chancellor". The Straits Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  4. Goh, Chin Lian (2014-04-24). "PM Lee on late MP Dixie Tan: 'She fulfilled her public as well as family duties amply'". The Straits Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைன்_வோங்&oldid=3363286" இலிருந்து மீள்விக்கப்பட்டது