அலையாத்தி காடுகள்

அலையாத்தி காடுகள் உலகம் முழுவதிலும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய அரிய வகை மரங்களின் தொகுப்பே அலையாத்தி காடுகள்.

வளர ஏற்ற இடம்தொகு

அதிக வெப்பம் அதிக மழை இருக்கும் இடங்களில் மட்டுமே அலையாத்தி மரங்கள் வளரும். மற்றும் கடலோர முகத்துவாரப் பகுதிகள் உப்பங்கழிகள் ஆகியவை அலையாத்தி வளர ஏற்ற இடமாகும்.

காணப்படும் இடங்கள்தொகு

தமிழ்நாட்டில் முத்துப்பேட்டை, பிச்சாவரம் ஆகிய பகுதிகளிலும் மேற்குவங்கத்தில் கங்கை - பிரம்மபுத்திரா ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளிலும் இத்தகைய காடுகள் காணப்படுகின்றன.இந்த பகுதிகளில் கடல் நீரோடு ஆற்றுநீர் கலக்கும் போது உப்பின் அளவு குறைகிறது. இத உவர் நீர் எனப்படுகிறது. இந்த நீர் நிறைந்துள்ள உவர் நிலங்களில் அலையாத்தி காடுகள் அடர்ந்து வளர்கின்றன.

மரங்களின் வகைகள்தொகு

உவர் நிலப்பகுதிகளில் 60 வகையான மரங்கள் உள்ளன. பிச்சாவரத்திலும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள தில்லைக்காடுகளிலும் 12 வகையான மரங்கள் உள்ளன. இதில் சுரபுன்னை வெண்கண்டல் கருங்கண்டல் ஆட்டுமுள்ளி பண்டிக்குச்சி நரிக்கண்டல் சிறுகண்டல் காகண்டல் தில்லை திப்பாரத்தை உமிரி என்ற மரங்களும் செடிகளும் மண்டியுள்ளன.

மரங்களின் சிறப்புதொகு

சுரபுன்னை வகையைச் சேர்ந்த மரங்களின் தண்டுகளில் இருந்து உருவாகும் வேர்கள் மணல் சேற்றுக்குள் இறங்கி விடுகின்றன. இவற்றுக்கு தாங்கு வேர்கள் என்று பெயர். வெண்கண்டல் மற்றுமு் உப்பாத்தா மரங்களின் வேர்கள் ஈட்டி போல பூமிக்கு வெளியிலும் நீட்டிக்கொண்டிருக்கும். சதுப்பு நிலப்பகுதியில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும்.எனவே சுவாசிப்பதற்காக இந்த வேர்கள் பூமிக்கு வெளியே தலையை நீட்டுகின்றன. ஆக்ஸிஜனை உள்ளிழுத்து மரங்கள் வாழ உதவி செய்கின்றன. இந்த அதிசய வேர்களை சுவாசிக்கும் வேர்கள் என்றும் பெயர். இப்படி நிலத்துக்கு அடியிலும் நிலத்திற்கு வெளியிலுமாக காணப்படும் வேர்கள் மண்ணோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.இந்த வேர்கள்தான் சுனாமியில் இருந்து முத்துப்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளை காப்பாற்றியிருக்கின்றன.80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி மரத்திற்கு உண்டு.கடலோட சீற்றத்தை தான் வாங்கிக்கொண்டு கடல் நீரின்வே கத்தை கட்டுப்படுத்தி விடும்.

மரங்களின் பயன்: மணல் அரிப்பை தடுக்கிறது.அலையாத்தி மரங்களின் வேர்கள் கடலோர மணலை இறுகச் செய்து மணல் அரிப்பை தடுக்கிறது.

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலையாத்தி_காடுகள்&oldid=2440487" இருந்து மீள்விக்கப்பட்டது