அல்வா (ஒலிப்பு) (Halwa)[1] என்பது கோதுமை, சர்க்கரை ஆகியவற்றிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும்.[2][3]. அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். அரேபிய மொழியில் அல்வா என்பதற்கு தேவ இனிப்பு என்று அா்த்தம்.[4] இந்தியாவில் திருநெல்வேலி அல்வா புகழ்பெற்ற தின்பண்டம் ஆகும். அல்வாவில் பல வகைகள் உள்ளன. அதில் கோதுமையினால் செய்யப்படும் அல்வா பிரபலமானது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரபலமாகும்.

அல்வா
பல்வேறு வகையான அல்வா
மாற்றுப் பெயர்கள்halawa, haleweh, halava, helava, helva, halwa, aluva, chalva, alva
வகைConfectionery
முக்கிய சேர்பொருட்கள்Flour base: grain மாவு
Nut base: nut butter, சீனி
கோதுமை அல்வா

கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திாி, கேரட், பால், பீட்ரூட் போன்றவற்றால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு. பொதுவாக சீனி, தேன் போன்றவற்றால் சுவையூட்டப்படுகின்றன. அசோகா அல்வா எனும் வகையும் பரவலாக அறியப்பட்டதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Clark, Melissa (March 24, 2004). "For Halvah, Use 1/2 Cup Nostalgia". The New York Times. https://www.nytimes.com/2004/03/24/dining/for-halvah-use-1-2-cup-nostalgia.html. 
  2. Davidson, Alan (1999). The Oxford Companion to Food. Oxford: Oxford University press. p. 378. ISBN 0-19-211579-0.
  3. Sharar, Abdul Halim (1994). Lucknow: the last phase of an oriental culture. Oxford University Press. p. 165. ISBN 9780195633757.
  4. http://dictionary.reference.com/browse/halvah
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Persian halva
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்வா&oldid=4223250" இலிருந்து மீள்விக்கப்பட்டது