அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோவில்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°49′11″N 80°12′43″E / 9.819704°N 80.212014°E |
பெயர் | |
பெயர்: | அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வட மாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அம்மன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
அமைவிடம்
தொகுஈழமணித்திருநாட்டில் சிரம் என விளங்கும் யாழ்ப்பாண மண்ணின் வட மறவர்கள் ஆட்சி புரிந்த வடமராட்சியின் கண்ணே அல்வாய் வேவிலந்தை பதியில் அமர்ந்து அருகடாச்சம் புரிகின்றாள் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோயில்.
தல வரலாறு
தொகுதமிழீழதேசத்தை வன்னியமன்னர் ஆட்சி செய்தபோது அல்வாய் என்ற எமது கிராமத்தில் சில நில உடைமையாளர்கள் வல்லமை பெற்றிருந்திருக்கிறார்கள். மழவராயன், மாப்பாணன், மணிவீரன் போன்றோர் சிலர் இம்மரபிலே தோன்றியவர்தான். வீரமாப்பாணமுதலியார், குமாரவேலன், கந்தர் என்பவர்கள் அவரது புதல்வர்கள். வள்ளிநாச்சியார் அவரது ஒரே மகள். இவர் உடைச்சி என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். விதவையும் கூட. உடைச்சி வாழந்த காலத்தில் 'அக்கம்மா' என்றபெண் தெய்வத்தின் மாயங்கள்பற்றியும் அவரது அதீத ஆற்றல்பற்றியும் ஊர்முழுவதும் ஓரே பேச்சு.ஊரின் கிழக்கே மண் கொழுத்த வனமான தாழ்ந்த பிரதேசம், ஐந்நூறு ஏக்கர்வரை இருக்கும். மாரி காலத்தில் வெள்ளம் கடல் போல காட்சியளிக்கும். ஒரு குளம், ஒரு கிணறு, ஒரு குகை அந்தப்பகுதி துலுக்கண் கோட்டை எனுங் காணியில் உள்ளது. இவையாவும் மாய அக்கை, மாய கை என பொருள்பட அழைக்கப்படும் மாயக்கைப் பிரதேசம் இது.
மாயக்கை கதை
தொகுஉடம்பே தெரியாது நீட்டிய ஒரு கையினை உடைய ஒருபெண் தெய்வம் பலி கேட்பதாக ஊரார் பேசிக் கொள்வர். பஞ்சகன்னியரைப் பலியிட்டால் அம்மாயக்கை வெள்ளிக்கடாரத்தில் பொன்தருமாம் என்பது கர்ண பரம்பரைக்கதை.
ஊடைச்சிக்கு மாய அக்கை மேல் பயபக்தி;. அவர் அடிக்கடி 'அக்கம்மா அக்கம்மா' என்று கூச்சலிடுவாராம். ஓவ்வொரு வெள்ளியும் நாச்சிமாரை தரிசிக்கப்போவாராம். அக்காலத்தில் நாட்டுக்கூத்தாக காத்தவராயன் நாடகம்பார்க்க அவர் தவறுவதில்லையாம். முத்துமாரி அவருக்குப்பிடித்த தெய்வமாக வணக்கத்திற்குரிய தெய்வமாக வந்துவிட்டதாம். நிலபுலங்கள் மிக்க குடும்பத்தில் பிறந்து விதவையாகி வெண்பட்டுடுத்தி வழிபாட்டுக்குச் செல்லும் உடைச்சி ஆண்டு தோறும் ஆடியில் மதுரை மீனாட்சியைத் தரிசிக்க தோணிமூலம் மதுரைக்குப் போவாராம். ஒரு தடவை மதுரைக்கடை வீதியில்இருந்த அழகார்ந்த ஒரு அம்மன் வெண்கலச் சிலையில் மனங்கொண்டு அதனை விலைக்கு வாங்கி; பயபக்தியுடன் ஊருக்கு எடுத்துவந்து தான் வாழ்ந்த நாற்சார வீட்டில் புனிதமான ஓரிடத்தில் வைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்ததாக பேசிக்வர்.
உடம்பே தெரியாது நீட்டிய ஒரு கையினை உடைய ஒருபெண் தெய்வம் பலி கேட்பதாக ஊரார் பேசிக் கொள்வர். பஞ்சகன்னியரைப் பலியிட்டால் அம்மாயக்கை வெள்ளிக்கடாரத்தில் பொன்தருமாம் என்பது கர்ண பரம்பரைக்கதை.
ஊடைச்சிக்கு மாய அக்கை மேல் பயபக்தி;. அவர் அடிக்கடி 'அக்கம்மா அக்கம்மா' என்று கூச்சலிடுவாராம். ஓவ்வொரு வெள்ளியும் நாச்சிமாரை தரிசிக்கப்போவாராம். அக்காலத்தில் நாட்டுக்கூத்தாக காத்தவராயன் நாடகம்பார்க்க அவர் தவறுவதில்லையாம். முத்துமாரி அவருக்குப்பிடித்த தெய்வமாக வணக்கத்திற்குரிய தெய்வமாக வந்துவிட்டதாம். நிலபுலங்கள் மிக்க குடும்பத்தில் பிறந்து விதவையாகி வெண்பட்டுடுத்தி வழிபாட்டுக்குச் செல்லும் உடைச்சி ஆண்டு தோறும் ஆடியில் மதுரை மீனாட்சியைத் தரிசிக்க தோணிமூலம் மதுரைக்குப் போவாராம். ஒரு தடவை மதுரைக்கடை வீதியில்இருந்த அழகார்ந்த ஒரு அம்மன் வெண்கலச் சிலையில் மனங்கொண்டு அதனை விலைக்கு வாங்கி; பயபக்தியுடன் ஊருக்கு எடுத்துவந்து தான் வாழ்ந்த நாற்சார வீட்டில் புனிதமான ஓரிடத்தில் வைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்ததாக பேசிக்கௌ;வர்.
காலதேவன் அவரது கணக்கைப் பார்ப்பதற்கு இடையில் தான் ஆதரித்துவரும் அம்மனை தன்பின் யார்தான் ஆதரிக்கப் போகிறார்கள்; என்ற கவலை உடைச்சியை ஆட்கொண்டது. அவர் கண்ணுறங்காத போதெல்லாம் திருவுருவச்சிந்தனைதான்.
கனவுரைத்தல்
தொகுஒரு நாள் அம்மாளே! என்று பெருமூச்சு விட்டபடி கண்ணுறக்கமானார் உடைச்சி 'வள்ளீ கவலைப்படாதே! ஊங்கடை அந்தக்காணிஇ வேவிலந்தைக் காணி எனது தலவிருட்சமாகத் தோன்றி இரண்டும் பிணைந்து வேம்புலந்தையாக காட்சி தருகிறதே அது யாருமல்ல. வேம்பு நான் இலந்தை சிவம் என்று அறிந்துகொள். அந்தச் சிவசக்தி தலம்தான் எனக்கப்பிடித்தமானது. ஏனனை அங்கே ஒரு கொட்டில் போட்டு அதற்குள் வைத்து தினமும் விளக்கேற்றிவா! மற்றதெல்லாம் நான் பார்க்கிறேன்' என்று அந்த மூதாட்டி கூறியதும் வள்ளி கனவிலே கதைக்கிறார்.
'அம்மாளே! மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் பெருந்திவரும் தலத்தில்தானே தெய்வம் குடியிருக்கும் என்று சொல்கிறார்களே! வள்ளி! விடுகவலையை நீ மாலையில் விளக்கேற்றும்போது உனது விளக்கோடு மூன்று தீபங்கள் எரிவதைக் காண்பாய். மேற்கேயுள்ளதீபம் எனது இருப்பிடத்தினைக் குறிக்கும். கிழக்குத் தீபம் நான்நீராடும்பொய்கையைக்குறிக்கம்.
மேலும் கிழக்கே தோன்றுவது எனக்கு விருப்பமான இலுப்பையைக் குறிக்கும். ஆக நாளைக்கே இதனைக் காண்பாய்! நூன் வருகிறேன்.
வள்ளி கனவுரைத்த அந்த மூதாட்டியை நித்திரையிலே வணங்கினாள். மேற்படி கனவுரைத்த செய்தி உலகெல.லாம் பரவிஇ ஊரே உடைச்சிவீட்டில் கூடிவிட்டது. 'இது கனவல்ல நினைவாக்க வேண்டியகனவு' எனச் சான்றோர் பலர் கூறி
வேம்பிலந்தையின் கீழ் அழகான ஒரு சிறிய கொட்டில் போட்டு காணியில் நிலத்தினை மெழுகி கோலமிட்டு பூவகைகளைத் தூவி மதுரையிலிருந்து எடுத்து வரப்பட்டதும் உடைச்சி கையாலேயே குடமுழுக்காட்டி கொட்டிலின் நடுவே கொலுவிருக்கவைத்தார்கள்.
முத்துமாரி அம்மன் எனப் பெயர்சூட்டி வணங்கினார்கள். இவ்விதம் பல்லாண்டுகள் கொட்டிலில் கொழுவிருந்த அம்மன் கோயிலை உடைச்சி வம்சவழியினர் பராமரித்து வரலாயினர் என்பது நாம் கர்ணபரம்பரையாகக் கேள்விப்பட்ட சங்கதிகள். ஆனால் எழுத்தாவணமான தோம்பு இவற்றை உண்மைப்படுத்தி நிற்கின்றது. அல்வை வேவிலந்தை முத்துமாரி அம்மனைக் கற்கோயிலில் குடியிருத்திய காலம் பற்றி இனி ஆராய்வோம்.
வேவிலந்தை எனும் காணி முப்பத்திரண்டு பரப்பளவு என்றும், அதன் உரிமையாளர் நான்கு வம்சவழியினர் என்றும் உடைச்சிவம்சம் தவிர்ந்த மூன்று வம்சத்தவரும் அம்மன் திருத்தலத்திற்கு உரிமை பாராட்டக்கூடிய அனைவரையும் ஒன்றிணைத்து திருத்தலம் எழுச்சிபெறவைக்க வேண்டும் என்ற அவாவினால் ஊர் மக்கள், வேளாண்மக்கள் ஒன்று கூடி கி.பி 1876ம் ஆண்டில் ஒரு பொது நிர்வாக அமைப்பினை உருவாக்கினர் என்றும் அந்நிர்வாகம் நாற்பது உறுப்பினர்களையும் ஐந்து பேர் கொண்ட பரிபாலனசபையையும் கொண்டதாக உருவாக்கினர் என்பதை1876 ஆம் ஆண்டு பிரசித்த நொத்தாரிசு இராமலிங்கம் ஆறுமுகம் முகதாவில் முடிக்கப்பெற்ற 123Æ124 ஆம் இலக்கத்தில் முடிந்த அதிகார பத்திரத்தால் அறியமுடிகிறது.
இவ்வதிகாரம் பெற்ற சபையினர் தான் கற்திரப்பணி மூலம் கோயிலை கட்டி எழுப்ப முடிந்தது. 1928 ஆம் ஆண்டு வரை இவ்வதிகாரசபை நிறுவிய கர்ப்பக்கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலகடியைச் சேர்ந்த தம்பிரான் அப்பா, கார்த்திகேசர் எனப்படும் பூலோகர் என்பவர்கள் முன்னின்று உழைத்தவர்கள் என்று கூறுவர்.
இவ்வேளை உடைச்சி வம்சத்தினரின் பரிபாலனத்தை எதிர்த்து கோயில் பரிபாலனம் பொதமக்களால் தெரிவுசேய்யப்பட்ட ஒரு சபையிடம் இருத்தல் வேண்டும் என்று பருத்தித்துறை நீதிமன்றில் ஒரு வழக்கு எழுந்தது.
திரு.வ. ஆறுமுக உபாத்தியாரும் மறுநால்வரும் வழக்காளிகளாக இருந்த வு.சு 457 ஆம் இலக்க வழக்கின் தீர்வைப்படி அல்வை முத்துமாரியம்மன் திருத்தலம் ஒரு பகிரங்க நம்பிக்கைச் சொத்தாக்கப்பட்டது.
அதாவது அல்வாயில் வசிக்கும் வேளாளர் பொதுமக்களால் தெரிவுசெய்யப்படும் நிர்வாகத்தினால் பரிபாலனஞ் செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதன் பிரகாரம் 1929-30 ஆம் ஆண்டுகளில் திரு. ஆறுமுகஉபாத்தியாரை செயலாளராகக் கொண்ட நிர்வாகம் பொறுப்பேற்றது. இக்காலத்திலேதான் அர்த்தமண்டபத்திலிருந்து மகாமண்டபம் வரையான பகுதி திராவிட சிற்பக் கலைஞர்களின் கல்லாரிகளின் செதுக்கல் காணமாக பாரிய கற்பாறைகள் உயிர்த்துடிப்புடன் எம்முன்னே காட்சிதருகின்றன. இத்தகைய பாரியவேலைப்பாடுகள் பொதுமக்களின் பணம் கொண்டே நடைபெற்றன என்பதும் அதற்கு இயக்க சக்தியாக தன்னலம் கருதாது ஓய்வொளிச்சல் பாராது பாடுபட்டவர் வேறுயாருமல்ல கோயிலை பொதுமைச் சொத்தாக்கிய திரு.வ. ஆறுமுகஉபாத்தியாயரே. இப்பணி நிறைவுபெற அன்றைய நிர்வாகம் அன்னாருக்கு கொடுத்த ஏகமனதான ஒத்துழைப்பும் மற்றோர் காரணமெனலாம். இன்றைய காலத்தில் அன்னார் செய்த திருப்பணியின் பெறுமதி பல லட்சங்களைத் தாண்டும் அல்லவா.
மாரியம்மன் வழிபாடு
தொகுமனித சமுதாயத்தில் தோற்றம் பெற்ற வழிபாடுகளில் தாய்த்தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகின்றது.மனித சமுதாயத்தின் ஆரம்பகாலத்தில் காணப்பட்ட வழிபாடு முறை மனிதனது வாழ் நிலையுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. இயற்கையிடமிருந்து தனது தேவையைப் பூர்த்தி செய்த மனிதன் அந்த இயற்கைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இயற்கையினால் இடையூறுகள் நேர்ந்த பொழுது இயற்கை சக்திகளை சாந்தப்படுத்தி இடையூறுகளுக்கு நிவர்த்தி காணும் வகையிலும் வழிபாடுகள் காணப்படடன.அந்த வகையில் சக்தி வழிபாடு தனித்துவம் வாய்ந்த தொன்றாக உலகளாவிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளமையை சமயங்களின் வரலாறுகள் மூலம் அறியலாம் .
ஊர் தோறும் பெண் தெய்வங்களை இந்து சமயத்தை சார்ந்த மக்கள் பலர் வணங்கி வருகின்றனர்.
இவ்வித ஊர்த் தெய்வங்களில் மற்றெல்லாவற்றையும் விட மிகவும் வழிபடப்படும் தெய்வம் மாரி அம்மன்என்பதை அறிய முடிகிறது. மாரி என்ற பெயர் மழை என பொருள் படும். வெப்பத்தை தணிவித்து வெப்பு நோய்களாகிய அம்மை முதலியவற்றை தீர்த்து'நாடு தலைக்கச் செய்து மக்களை மக்களை மழை போலக் காப்பவள் இந்த தெய்வம் என்று மக்கள் போற்றுவர். மாரி அம்மனை மழைக்கு அதிதேவதையாக தமிழ் நாட்டுக் கிராம மக்கள் வழிபாடு செய்வதை அறிய முடிகிறது. ஈழத்திலும் அத்தகைய வழிபாடு பேணப்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது. இந்த அம்மனைச் சொல்லி சொல்லி செல்லியாத்தாள் ,செல்லாண்டியம்மன் ஆயிரம் கண்ணுடையாள் முத்துமாரி எனப்பலவகை நாமங்களால் தமிழ் நாட்டில் அழைப்பர். ஈழத்தில் மாரியம்மனை முத்துமாரி ,மாரியம்மன்,மாரியாச்சி,அம்பாள் ஆச்சி என அழைப்பது வழக்கமாக காணப்படுகின்றது .
, சிலப்பதிகாரத்தின் முன்னுரைப்பகுதியில் பாண்டிநாட்டு.கொங்குநாடு,மழைநாடு ஆகிய நாடுகளில் மழைவளம் வேண்டி ஊர் தோறும் பெண் தெய்வங்களை இந்து சமயத்தை சார்ந்த மக்கள் பலர் வணங்கி வருகின்றனர்.
இவ்வித ஊர்த் தெய்வங்களில் மற்றெல்லாவற்றையும் விட மிகவும் வழிபடப்படும் தெய்வம் மாரி அம்மன்என்பதை அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்தின் இன்னோர் இடத்தில் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குப் பல இடங்களில் கோயிலமையத்து விழாவோடு சாந்தி செய்தனர் என்றும் அதனால் மழை வளம் குறைந்து வறுமை எய்தி வெப்பு நோயும் குருவும் தொடர வருந்தியிருந்த நாடு. மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கியதென்றும் குறிப்பிட்டுள்ளமை கண்ணகி மாரித்தாயின் அம்சம் என்பதை மேலும் ஊகிக்கச்செய்கிறது.
மாரி அம்மனை வேம்பு முதலிய மரத்தடியிலும் கல்நட்டு வைத்தும் கட்டுத்தறி போன்ற தூண் நாட்டியும் கரகம் வைத்து வேப்பிலையினால் அணிவித்தும் நீர் கொட்டிக்கொண்டே இருக்கும் கரகத்தை தொங்க விட்டும் மற்ற அம்மன்களுக்கு செய்வது போன்று சிலை அமைத்தும் வழிபடுவர்.இவ்வம்மனுக்குவேப்பிலை மிகவும் பிரியமான அணியாகும் .செவ்வாய் ,வெள்ளி ,ஞாயிறு ஆகிய நாட்களும் தை ஆடி மாதங்களும் மாரித்தாயை வழிபடும் சிறப்பான காலங்களாகும் .மாரித்தாயை பொங்கல் செய்தும் மாவிளக்கு போட்டும் இளநீர் வைத்தும் வழிபடுவதுடன் உயிர்பலி செய்து வழிபடடமையும் அறிய முடிகின்றது .காவடி எடுத்தும் கரகம் எடுத்தும் அலகு குத்திக்கொண்டு ஆடியும் தம் நேர்த்திக் கடன்களை செய்வது மாத்திரமல்லாமல் தீமிதித்து வழிபாடு இயற்றுவார் .
ஆரம்பகாலத்தில் கிராமிய வழிபாடாக நாடடார் மரபாக கிராமிய வழிபாட்டுக் கோலங்களுடன் இருந்த தாய்த்தெய்வ வழிபாடு பிறகாலத்தில் ஆகம முறை ஒழுங்குகள் பேணப்படும் வழிபாடாக வளர்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.ஆனாலும் மாரியம்மன் வழிபாடு தன் நாடடரியர் பண்பினை தற்போதும் பேணியிருப்பதும் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியதொன்றாகும்.அம்மை நோய் ஒருவருக்கு வந்தால் மாரியாத்தாள் வந்திருக்கிறாள் பூத்திருக்கிறாள் நிறைபாரமாக முத்துப் போட்டு இருக்கிறாள் என்று தமிழ் நாட்டில் கூருவது வழக்கம்.இது போல அசாம் மாநிலத்தில் அம்மை நோய் ஒருவருக்கு வந்தால் ஆயிதோன்றி பூச்சொரிந்திருக்கிறாள் ஏன்று அங்குள்ள மக்கள் சொல்வது வழக்கம் .மாரி அம்மனை அவர்கள் அன்புடன் ஆயி என்று அழைப்பது மரபு .ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்து கிராமிய மக்களிடையேயும் மடடகளப்பு மக்களிடையேயும் மலையக தோடட வேலை செய்யும் மக்களிடையேயும் மாரியம்மன் வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது .அம்மை நோய் வந்தால் மாரியம்மனுக்கு நேர்த்தி வைத்து நேர்த்திக்கு ஏற்ப மொடடையடித்தும் பொங்கல் செய்தும் மாரி என பெயரிட்டும் நாடகம் முதலான கலை விழாக்கள் செய்தும் மாரி அம்மனை வழிபாடு செய்கின்றனர்.தங்களுடன் மிக நெருங்கிய நிலையில் குடும்ப அங்கத்தவர் நிலையில் மாரியமானுடன் தொடர்புகொண்டு வழிபாடு ஆற்றுகின்றனர்.அம்மைநோய் ஏற் பட் டவர்களுக்கு மாரி அம்மனின் தீர்த்தம் மருந்தாக விடப்படுவதும் உண்டு.மாரியம்மன் பற்றிய பல ஐதீகங்கள் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் அசாம் போன்ற இடங்களிலும் உள்ளன.இந்து தெய்வீக இயலில் வ்ரலாற்றை ஆராய்பவர்களுக்கும் இந்துக்கலை பற்றிய கண்ணோட்டத்திலும் இத்தகைய ஐதீகங்கள் இன்றியமையாது வேண்டப்படுவன.எல்லாத் தெய்வங்கள் போன்று மாரி அம்மன் மனித வாழ்க்கைக்கு தேவையான ஏனைய செல்வங்களை அளிப்பவளாகவும் அருட்கொடை புரிபவளாகவும் விளங்குகின்றாள்.