அல்-உமர்-முஜாகிதீன்

அல்-உமர்-முஜாகிதீன் (Al Umar Mujahideen) இந்தியாவின் ஸ்ரீநகரில் தொடங்கப்பட்ட தீவிரவாதக் குழு ஆகும். இக்குழுவானது முஷ்டாக் அஹமது சர்கார் என்பவரால் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இக்குழுவானது ஜம்மு மற்றும் காஷ்மீர் விடுதலை முன்னணியுடன் (Jammu and Kashmir Liberation Front (JKLF) தொடர்புடையது. இந்த இயக்கம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். முஷ்டாக் அஹமது சர்கார் இந்திய அரசால் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தியதி காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஆஃப்கான் தீவிரவாதிகள் ஐ.சி 814 விமானத்தை அதன் பயணிகளுடன் கடத்தி இவரை விடுவித்தனர். அதன் பின் அவர் பாகிஸ்தானில் உள்ளார்.[1]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-உமர்-முஜாகிதீன்&oldid=2239688" இலிருந்து மீள்விக்கப்பட்டது