அழுதகன்னி ஆறு
அழுதகன்னி ஆறு என்பது தென்காசி நகராட்சியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணை ஆறு ஆகும்.[1] அழுதகன்னி ஆறு மூலம் தென்காசி நகராட்சியிலுள்ள 827.47 ஹெக்டேர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கிறது. இது சிற்றாறுடன் கடப்போகாத்தி என்னும் ஊரில் இணைகிறது. மேலும் இதன் மூலமே பழைய குற்றால அருவியும் உற்பத்தி ஆகிறது. இது எட்டு அணைக்கட்டுகளைக் கொண்டுள்ளது.
கற்கால சமூகம்
தொகுஇந்த ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், குறுனிக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.[2]
பாசனம்
தொகுமொத்தம் சிற்றாற்றிற்கு 5 கிளை நதிகளும் 3 உபகிளை நதிகளும் உள்ளன. அவற்றின் மூலம் தென்காசி நகராட்சி முழுதும் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் விவரம்,
நதி | மூல நதி/மலை | அணைக்கட்டுகள் (தேக்கங்களின்) எண்ணிக்கை | பாசன நில அளவு (ஹெக்டேர்கள்) |
---|---|---|---|
சிற்றாறு | குற்றாலம் | 17 | 8903.27 |
ஐந்தருவி ஆறு | சிற்றாறு | 1 | 293.4 |
அரிகர நதி | சிற்றாறு | 7 | 445.10 |
குண்டாறு | அரிகர நதி | 7 (1) | 465.39 |
மொட்டையாறு | குண்டாறு | 1 (1) | 141.64 |
அழுதகன்னியாறு | சிற்றாறு | 8 | 827.47 |
அனுமன் நதி | சிற்றாறு | 14 | 4046.94 |
கருப்பாநதி | அனுமன் நதி | 6 (1) | 3844.59 |
உப்போடை | சிற்றாறு | 2 | 445.16 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-04-05.
- ↑ இந்திய தொல்லியல் துறை. "இந்திய தொல்லியல் துறை வெளியீடு 1988-89". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: மே 17, 2012.