அவசர நிறுத்தி

அவசர நிறுத்தி (ஆங்:Emergency-stop), நிறுத்தல் நிலைமாற்றி (Kill Switch) அல்லது அவசர மின்திறன் இணைப்பின்மை (EPO, Emergeny Power Off) என்றும் அறியப்படும், இது ஒர் பாதுகாப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி சாதனம் அல்லது இயந்திரங்களை நெருக்கடி காலங்களில் நிறுத்துகிறது. வழக்கமான காலங்களில் இயந்திரங்களை நிறுத்தும் முறைகளைப் போலன்றி, இயந்திரத்தின் அனைத்து அமைப்புகளையும் ஒரு ஒழுங்கான முறையில் எவ்வித சேதாரமும் இன்றி நிறுத்துகிறது, புதிதாக இயக்குபவர்கள் மற்றும் பார்வையாளர்களாலும் இயந்திரத்தின் இயக்கத்தினை  விரைவில் நிறுத்தும் வண்ணம் (அது இயந்திரத்தினை சேதாரமாக்கினாலும்) அவசரநிறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.  பயிற்சியற்ற இயக்குபவர்கள் மற்றும் பார்வையாளர்களாலும் எளிதில் அணுகும் வண்ணம் அவசரநிறுத்தி வெளிப்படையாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நிறுத்தல் நிலைமாற்றி/அவசரநிறுத்தி
உறையற்ற அவசர நிறுத்தி
வகைப்படுத்தல்இயந்திரக் கூறு
தொழில்துறைதானியக்கம், படகு, ஆற்றல், பொறியியல், பொழுதுபோக்கு
ஆற்றல் பொருத்தியசில இயந்திர சக்தியினாலும், சில மின்சக்தியினாலும் இயங்கும்

பயன்பாடுகள் தொகு

தொழில்துறை இயந்திரங்கள் தொகு

 
இயந்திரத்தினை மீண்டும் செயற்படுத்த அவசரநிறுத்தியை மீட்டெடுக்கும் வண்ணம் திருப்பும் திசை காட்டப்பட்டுள்ளது

பெரிய தொழிற்சாலை இயந்திரங்களில் அவசர நிறுத்தியானது பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தாலும் பொதுவாக இயக்குபவர் பலகையின் மீது அமைந்திருக்கும். இதனால் இயக்குபவர் இயந்திரத்தின் மின்திறனை எளிதில் துண்டித்து தொழிலாளர்களை இயந்திர விபத்துக்களில் இருந்து காக்கமுடிகிறது.[1] பழுது- காப்பு செயற்பாட்டிற்காக இது எப்பொழுதும் மூடிய நிலையிலிருக்கும் நிலைமாற்றி ஆகும், இதனால் தற்செயலாக மின்கம்பிகள் அறுந்தபொழுதும் அவசர நிறுத்தி செயல்படுவதை தடுக்கமுடிகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில், உத்தரவு 2006/42/EC-படி அனைத்து வகையான இயந்திரங்களிலும் அவசரநிறுத்தி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சிறிய கைகளினால் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் குறைந்த ஆபத்துகள் விளைவிக்கும் இயந்திரங்கள் மட்டுமே அவசரநிறுத்திகளில்லாமல் விலக்கு அளிக்க விண்ணப்பிக்க முடியும்.

கேளிக்கை சவாரிகள் தொகு

தொழில்துறை உபகரணங்களை ஒத்த அவசரநிறுத்தி பொழுதுபோக்கு சவாரிகளிலும் இருக்கிறது. சவாரி இயந்திரத்தின் மீது எப்பொழுதும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ''பிரேக்''-ஆனது மின் இணைப்பு கொடுக்கும்பொழுது இயங்காதவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்; மீண்டும் மின் சக்தி துண்டிக்கப்படும்பொழுது ''பிரேக்'' சவாரி இயந்திரத்தின் மீது செயற்பட்டு அதனை நகரவிடாமல் செய்யும். 

மென்பொருள் தொகு

ஸ்தூல நிறுத்தல்நிலைமாற்றிகளைப் போன்ற ஒத்த தன்மை கொண்ட நுட்பமானது மென்பொருள் துறைகளிலும் பயன்படுகிறது. உதாரணமாக, உற்பத்தி விலக்கப்பட்டுள்ள அல்லது பராமரிப்பு கட்டணம் செலுத்தாத மற்றும் தொலைந்த அல்லது களவாடப்பட்ட சாதனங்களில் தயாரிப்பாளர் அல்லது உரிமதாரர் மென்பொருளை முடக்க முடியும்.[2][3] , வான்னாகிரை பணயத் தீநிரல் தாக்குதல்களில் தீம்பொருள்களை களைய நிறுத்தல் நிலைமாற்றி பயன்படலாம்.[4][5]

தானியங்கிகள்[6] மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கை அறிவுத்திறன் கட்டமைப்புகளில்[7] நிறுத்தல் நிலைமாற்றிகளை செயல்படுத்துவதை பற்றி விவாதம் நடைபெறுகிறது.

மேலும் பார்க்க தொகு

  • பேட்டில்சார்ட்-ஆனது நிறுத்தல் நிலைமாற்றிக்கு எதிராகச் செயற்படும், இங்கு இயந்திரமானது சேதாரம் அல்லது காயம் ஏற்பட்டாலும் நில்லாது செயற்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சான்றுகள் தொகு

  1. Repas, Robert (June 22, 2010) "Designing with E-stop switches". machinedesign.com
  2. Davies, Chris (19 Sep 2009). "Microsoft remote software "kill switch" confirmed". பார்க்கப்பட்ட நாள் 10 May 2017.
  3. Williams, Martyn (24 Jun 2014). "10 things to know about the smartphone kill switch". பார்க்கப்பட்ட நாள் 10 May 2017.
  4. Chan, Sewell (14 May 2017). "Cyberattack's Impact Could Worsen in 'Second Wave' of Ransomware". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  5. "Warning: Blockbuster 'WannaCry' malware could just be getting started" (in ஆங்கிலம்). NBC News. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  6. Kottasova, Ivana (12 January 2017). "Europe calls for mandatory 'kill switches' on robots". CNNMoney. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  7. Larson, Selena (26 January 2017). "Killing the immortal: Why scientists are debating the life span of robots". CNNMoney. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவசர_நிறுத்தி&oldid=2731248" இலிருந்து மீள்விக்கப்பட்டது