மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம்

(அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஸ்ஸபா வித்தியாலயம் (Assafa Vidyalaya, අස්සපා මුස්ලිම් විද්‍යාලය) இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் வெலிகமை மதுராப்புர என்ற இடத்தில் அமைந்துள்ள இசுலாமியப் பாடசாலையாகும்.[1]

அஸ்ஸபா வித்தியாலயம்
180px
மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயத்தின் சின்னம்
அமைவிடம்
மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகமை, இலங்கை
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி அரசு-உதவி பெறும் பள்ளி
தொடக்கம்1973
பள்ளி மாவட்டம்மாத்தறை மாவட்டம்
கல்வி ஆணையம்இலங்கை கல்வி அமைச்சு
அதிபர்எம்.எஸ்.எம். ஹிப்ளர்
தரங்கள்1 முதல் 11 வரை

வரலாறுதொகு

ஆசிரியர்கள் த.சா. அப்துல் லத்தீப், எம். பீ. எம். ஸஹீத், ஆயுர்வேத மருத்துவர் பீ. எம். அப்துல் கரீம், எம். ஐ. எம். ஹபீள், எம். சீ. அபூதாஹிர் ஆகியோரின் அயராத உழைப்பினாலேயே இப்பாடசாலை இவ்வூரில் அமைந்தது. இதற்காக மருத்துவர் அப்துல் கரீம் தனது சொந்தக் காணியை அன்பளிப்புச் செய்தார்.

1973 சனவரி 13 ஆம் நாள் கல்வியமைச்சின் பிரதிநிதியாக, பிரதிக் கல்வியமைச்சராகவிருந்த பீ. வை. துடாவை, கல்வியமைச்சின் தமிழ்மொழிப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ. எச். எம். எம். வெபா ஆகியோர் அதிகாரபூர்வமாக இப்பாடசாலையைத் திறந்து வைத்தனர். அஸ்ஸபா வித்தியாலயத்தின் முதலாவது தலைமையாசிரியாராக எஸ். ஏ. எம். மௌலானா பதவியேற்றார்.

1990 ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து முதன் முதலாக மாணவர்கள் க.பொ.த. சா.த. பரீட்சைக்குத் தோற்றினர். 1998 ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து வெள்ளிவிழாவின் போது 'மதுரம்' சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

2020 பெப்ரவரி மாதம் 20 ஆம் நாள் குவைத் அரசாங்கத்தின் சர்வதேச தொண்டர் நிறுவனத்தினால் இரு மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

சேவைபுரிந்த அதிபர்கள்தொகு

  • எஸ்.ஏ. மக்பூல் மௌலானா 1973 - 1980
  • எம்.ஐ.எம். ஹபீள் 1980.10.14 - 1999.12.22
  • மௌலவி எம்.எம். ஹுஸைர்
  • எம். புனானி
  • எம். எச். முஹம்மத்
  • எம்.எம். இஹ்ஸான்
  • ஏ.எச்.எம். யூசுபு
  • எம்.எஸ்.எம். இர்பான்
  • எம்.எஸ்.எம். ஹிப்ளர் (2014.09...)

பாடசாலைப் பண்தொகு

அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!

கலைஜோதி நிலா எனவே
கறை நீங்கி அருள்மிகவே - இறைவா
நிலை மேவிய பண்புகளே
நிறைவாக்கிடுவாய் இறைவா!

அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!

உயர்தெங்கு வளம் தருமே
ஒளிசேர் மதுராப்புரமே - இறைவா
அஸ்ஸபா எங்கள் அறிவகமே
அணிசேர்த்திடுவாய் இறைவா!

அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!

அறிவின் கடலாய்த் திகழ்ந்தார்
அருமேதை கஸ்ஸாலி இமாம் -இறைவா
அதிலோர் துளியைத்தானும்
அடைந்தோங்க அருள் இறைவா!

அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு