ஆக்கூர், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். இது மயிலாடுதுறை - தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சிவன் கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் யானை ஏற முடியாத வண்ணம் உயரமாகவும் படிகள் செங்குத்தாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்கூர் பள்ளிவாசல் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய பள்ளிவாசல். மேலும் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அரபி மொழி கற்பிக்கப்பட்ட பள்ளியும் இங்குதான் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கூர்&oldid=3454345" இலிருந்து மீள்விக்கப்பட்டது