ஆங் காமி

இந்திய மலையேறி

ஆங் காமி செர்ப்பா (Ang Kami Sherpa) என்பவர் மூன்றாவது இந்திய எவரெசுட்டுப் பயணக்குழுவில் உறுப்பினராக இருந்தவராவார். இந்தியகடற்படை அலுவலராக இருந்த மோகன் சிங் கோலி என்பவர்1965 ஆம் ஆண்டு இப்பயணக் குழுவின் தலைவராகவழி நடத்தினார். எவரெசுட்டு சிகரத்தை ஏறிய முதலாவது வெற்றிகரமான இந்தியக்குழுவினர் இவர்களேயாவர்.21 முக்கியபயண உறுப்பினர்களும் 50 செர்ப்பா இன மலைவாழ்மக்களும் இக்குழுவில் இருந்தனர். குழுவினரின்மலையேறும் ஆரம்ப முயற்சி 1965ஆம் ஆண்டின் ஏப்ரல்மாத இறுதியில் தொடங்கியது.மோசமான வானிலை காரணமாக முகாமுக்குத் திரும்பிய இவர்கள் சிறந்த வானிலைக்காக மேலும் 2 வாரங்கள் காத்திருந்தனர்.1965 ஆம் ஆண்டு மே மாதம் 24 அன்று புவியியலாளரும் மலையேறியுமான சந்திரபிரகாசு வோராவுடன் ஆங்காமி எவரெசுட்டு சிகரத்தின் உச்சியை அடைந்தார். இச்சிகரத்தை அடைந்த உலகின் இருபதாவது நபர் என்ற சிறப்பும் மற்றும் இந்தியாவின் ஐந்தாவது நபர்என்ற சிறப்பும் ஆங்காமிக்குஉண்டு.

ஆங் காமி செர்ப்பா
Ang Kami Sherpa
பிறப்புஇந்தியா
இறப்பு1970
சார்புIndia
விருதுகள்பத்மசிறீ, அர்ச்சுணா விருதுகள்
1965 ஆம் ஆண்டு எவரெசுட்டு சிகரத்தை அடைந்ததன் நினைவாக வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் வில்லை
பிரதமர் நரேந்திர மோடி, 1965 ஆம் ஆண்டின் இந்திய எவரெசுட்டு பயணக்குழு உறுப்பினர்களை 2015 மே 20 அன்று பொன்விழாவின் போது சந்தித்தார்
பிரதமர் நரேந்திர மோடி, 1965 ஆம் ஆண்டின் இந்திய எவரெசுட்டு பயணக்குழு உறுப்பினர்களை 2015 மே 20 அன்று பொன்விழாவின் போது சந்தித்தார்

ஆங்காமி செர்ப்பாவின் சாதனையைப் பாராட்டும்விதமாக இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ச்சுணா விருதும்[1] பத்மசிறீ விருதும்[2] வழங்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Arjuna Award for The first Indians on Everest on 1965-". www.sportsauthorityofindia.nic.in. Archived from the original on 2019-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-10-20.
  2. "Padma Shree for The first Indians on Everest on 1965-". www.dashboard-padmaawards.gov.in. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்_காமி&oldid=3947553" இலிருந்து மீள்விக்கப்பட்டது