ஆசியா மைனர்

ஆசியா மைனர் அல்லது சிறிய ஆசியா (கிரேக்கம்: Μικρά Ασία , Mikra Asia; துருக்கிய மொழி: Anadolu et Küçük Asya, அனத்தோலியாவும் ஆசிய மைனரும்) ஐரோப்பாவிற்கு அடுத்துள்ள ஆசியாவின் பகுதிகளாகும். பலவெவ்வேறான வட்டாரங்கள் இதில் அடங்கும்: லிடியா, லிசியா, கேரியா, கலாசியா, பிலியன்சு,பிதைனியா,பைசியா, உரோமானிய ஆசியா மாகாணம் (இது எபேசஸ் அல்லது ஐயோனியா எனவும் அழைக்கப்பட்டது), சிலிசியா, ஐசவுரியா, ஐரிக் போன்றவை அடங்கும்

பண்டைய அனதோலியாவில் ஆசிய மைனர் பகுதிகள்

ஆசிய மைனர் ஆசியா கண்டத்தின் தற்கால துருக்கி மற்றும் ஆர்மேனியாவின் மேட்டு நிலங்களை உள்ளடக்கிய மூவலந்தீவுப் பகுதியாகும். இது உலக நாகரீகங்களின் தொட்டிலாக விளங்கிய பகுதி.[1]

துருக்கி மொழியே ஆசிய மைனரின் பெரும்பாலான மொழியாகும். கருங்கடல், ஏஜியன் கடல் மற்றும் மத்தியதரைக் கடல் ஆசிய மைனரின் மூன்று பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. ஐரோப்பா கண்டம் மற்றும் ஆசிய கண்டம் ஆகியவைகளுக்கிடையே ஆசிய மைனர் பகுதி அமைந்துள்ளதால், இங்கு பல்வேறு மேலை நாட்டு மற்றும் கீழை நாட்டு கலாசாரங்களையும், நாகரீகங்களையும் பின்பற்றும் பல்வேறு இன மக்கள் இன்றளவும் ஆசியா மைனரில் வாழ்கின்றனர்.

கிரேக்கர்கள், ரோமானியர்கள், கோத் மக்கள், பைசாண்டியர்கள், லிடியர்கள், ஹிட்டைட்டைஸ்கள், பாரசீகர்கள் மற்றும் ஆர்மீனியர்கள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் ஆசிய மைனர் பகுதியை கைப்பற்றி வாழ்ந்தனர்.

ஆசியா கண்டத்தின் இச்சிறு பகுதி உரோமானியப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக இருந்ததால், இப்பகுதியை பின்னாளில் ஆசியா மைனர் (சிற்றாசியா) என்றழைக்கப்பட்டது. [2]

ஆசியா மைனர் பகுதியில் அமைந்த ட்ராய் (Troy) நகரம் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது.

புவியியல்தொகு

 
ஆசியா மைனரும் மெசொப்பொத்தேமியாவும் பண்டைய காலத்தில்

துவக்க காலத்தில் அனத்தோலியா என்ற பெயர் மூவலந்தீவின் உட்புறப்பகுதிகளை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. பைசாண்டைனிய காலதில் அனத்தோலிகம் என்ற மறைமாவட்டம் இருந்தது. இதற்கு முந்தையக் காலங்களில் ஆசியா மைனர் என்ற பெயர் பய்படுத்தப்பட்டது. 1923இல் துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் அனத்தோலியா என்ற சொல் கிழக்கு திரேசு தவிர்த்த அனைத்து துருக்கிக்கும் பயன்படுத்தப்படுகின்றது. நடுநிலக் கடலின் தெற்கு, மேற்குப்பகுதிகளை சுற்றியும் துருக்கியின் வடக்கிலுள்ள கருங்கடல் பகுதியும் டார்டனெல்லெசின் வடக்கு-மேற்கத்திய பகுதியும் அடங்கும்.

மேற்கோள்கள்தொகு

  1. Asia Minor
  2. Asia Minor

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியா_மைனர்&oldid=3579868" இருந்து மீள்விக்கப்பட்டது