ஆசிலியின் தொடுப்பு
ஆசிலியின் தொடுப்பு (Ashley's bend) என்பது இரண்டு கயிறுகளின் முனைகளைத் தொடுத்துக் கட்டுவதற்கான ஒரு தொடுப்பு வகை முடிச்சு ஆகும். இது பாதுகாப்பானதும் குறிப்பிடத்தக்க அளவு இழுவையையும், அசைவுகளையும் தாங்கக்கூடியது. இது செப்பெலின் முடிச்சை ஒத்தது. இம் முடிச்சு வழுக்கும் தன்மை உடையதல்ல எனினும், சுமையேற்றப்பட்ட பின் அவிழ்ப்பதற்குக் கடினமானது.
ஆசிலியின் தொடுப்பு | |
---|---|
பெயர்கள் | ஆசிலியின் தொடுப்பு, ஆசிலி தொடுப்பு |
வகை | தொடுப்பு |
தொடர்பு | செப்பெலின் தொடுப்பு, Trident loop |
ABoK |
|
இது ஆசிலியின் நூலில் காட்டப்பட்டிருந்தாலும் இதற்குப் பெயர் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆசிலி இதுபற்றிச் சாதகமான கருத்துக் கொண்டிருந்தாரா என்பதும் தெளிவில்லை.
குறிப்புகள்
தொகு