ஆசோனியம் (Ausonium) Ao என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டாலும் 93 என்ற அணு எண்ணாலும் பெயரிடப்பட்டு விவரிக்கப்பட்ட ஒரு தனிமமாகும். இப்போது நெப்டியூனியம் என்ற பெயரால் இத்தனிமம் அழைக்கப்படுகிறது. இத்தாலியின் கிரேக்க பெயரான ஆசோனியா என்ற பெயர் இத்தனிமத்திற்கு சூட்டப்பட்டது. [1] அதே குழு இத்தாலிக்கு வழங்கப்பட்ட கவித்துவமான பெயரான எசுபெரியா என்ற பெயரை முன்னிறுத்தி 94 என்ற அணு எண் கொண்ட அடுத்த தனிமத்திற்கு எசுபெரியம் என்ற பெயரை வழங்கியது. [2] பின்னர் இத்தனிமத்திற்கு புளூட்டோனியம் என்று பெயரிடப்பட்டது.

1934 ஆம் ஆண்டில் ரோம் பல்கலைக்கழகத்தின் என்ரிக்கோ பெர்மி மற்றும் விஞ்ஞானிகள் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட இத்தனிமம் இப்போது மதிப்புநீக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதே ஆண்டில் பெர்மியின் சோதனை முடிவுகளுக்கான மாற்று விளக்கங்களை ஐடா நோடாக் முன்னதாகவே வழங்கியிருந்தார். [3] 1938 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு செயல்முறை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெர்மியின் கண்டுபிடிப்பு உண்மையில் பேரியம், கிரிப்டன் மற்றும் பிற தனிமங்கள் சிலவற்றின் கலவை என்பது உணரப்பட்டது. உண்மையான தனிமம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு நெப்டியூனியம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. [2]

இத்தாலியின் சின்னத்தை ஏந்தியிருந்த ரோமானிய அதிகாரிகள் லிக்டோர்கள் எனப்பட்டனர். இதனால் பாசிச கோட்பாட்டாளர்கள் இத்தனிமங்களில் ஒன்றுக்கு லிட்டோரியா என்ற பெயரைச் சூட்ட விரும்பினர். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Fermi, E. (1934). "Possible Production of Elements of Atomic Number Higher than 92". Nature 133 (3372): 898–899. doi:10.1038/133898a0. Bibcode: 1934Natur.133..898F. 
  2. 2.0 2.1 2.2 Ruth Lewin Sime (2000). "The Search for Transuranium Elements and the Discovery of Nuclear Fission". Physics in Perspective 2 (1): 48–62. doi:10.1007/s000160050036. Bibcode: 2000PhP.....2...48S. 
  3. Noddack, Ida (1934). "Über das Element 93". Angewandte Chemie 47 (37): 653. doi:10.1002/ange.19340473707. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசோனியம்&oldid=3145473" இலிருந்து மீள்விக்கப்பட்டது