ஆச்சார்ய கிருபளானி

இந்திய அரசியல்வாதி

ஆச்சார்ய கிருபளானி என்று அறியப்படும் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி (நவம்பர் 11, 1888 – மார்ச்சு 19, 1982) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர். பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்கிரசு கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எனினும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார்.[1]

ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி
1989 ஆம் ஆண்டு இந்திய அரசு ஆச்சார்ய கிருபளானக்கு வெளியிட்ட அஞ்சல்தலை
பிறப்பு(1888-11-11)நவம்பர் 11, 1888
ஐதராபாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புமார்ச்சு 19, 1982(1982-03-19) (அகவை 93)
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சுசேதா கிருபளானி

1970களின் நெருக்கடி நிலைக்குப் பின்னர் இவரது அரசியல் பங்களிப்பு குறைந்து போனது.

ஆரம்ப காலம்

தொகு

ஜீவத்ராம்(ஜீவாத்ராம்) பகவன்தாஸ் கிருபளானி 1888 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள சிந்து மாகாணத்தில் பிறந்தார். பூனேயில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தார். பின்னர் காந்தி தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்த பிறகு விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். அவர் காந்திஜியிடம் மிகவும் நெருக்கமாக இருந்து ஒரு காலத்தில் அவரின் முக்கிய சீடராகவும் திகழ்ந்தார். அவர் 1970 இல் நடந்த அவசரகால பிரகடனத்திற்கு அதிருப்தி தெரிவித்தவர்களில் முக்கியமானவராக இருந்தார்.

கிருபளானி ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதுடன் காந்தியின் குஜராத், மகாராஷ்டிரா ஆசிரமங்களில் சமுக சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். பிறகு பிஹார் மற்றும் வடக்கிந்தியாவிற்கு சென்று புது ஆசிரமங்கள் அமைக்க எற்பாடு செய்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Bhavana Nair and Sudha Sanjeev, ed. (1999). "J.B. Kripalani". Remembering Our Leaders. Vol. Vol. 9. Children Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7011-842-5. {{cite book}}: |volume= has extra text (help)
  2. [ http://www.thefamouspeople.com/profiles/j-b-kirpalani-5303.php J. B. Kripalani]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சார்ய_கிருபளானி&oldid=4037344" இலிருந்து மீள்விக்கப்பட்டது