ஆட்டம் (மலையாளத் திரைப்படம்)

2024 மலையாளத் திரைப்படம்

 ஆட்டம் (பொருள்: நாடகம், Aattam) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இதை ஆனந்த் ஏகர்ஷி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை ஜாய் மூவி புரொடகசன்ஸ் சார்பில் அஜித் ஜாய் தயாரித்தார்.

ஆட்டம்
சுவரிதழ்
இயக்கம்ஆனந்த் ஏகர்ஷி
தயாரிப்புஅஜித் ஜாய்
கதைஆனந்த் ஏகர்ஷி
இசைபசில் சி. ஜே.
நடிப்பு
  • ஜரின் ஷிஹாப்
  • வினய் போர்ட்
  • கலாபவன் ஷாஜான்
  • அஜி திருவாங்குளம்
  • ஜாலி ஆண்டனி
  • மதன் பாபு கே.
  • நந்தன் உன்னி
  • பிரசாந்த் மாதவன்
  • சனோஷ் முரளி
  • சந்தோஷ் பிறவம்
  • செல்வராஜ் ராகவன் வி. ஆர்.
  • சிஜின் சிஜீஷ்
  • சுதீர் பாபு
ஒளிப்பதிவுஅனுருத் அனீஷ்
படத்தொகுப்புமகேஷ் புவனேந்த்
கலையகம்ஜாய் மூவி புரொடக்சன்ஸ்
விநியோகம்ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடுஅக்டோபர் 13, 2023 (2023-10-13)(IFFLA)
5 சனவரி 2024
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
மொத்த வருவாய் 1.5 crore[1]

இந்த திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் 2023 ஆம் ஆண்டுக்கான கிராண்ட் ஜூரி விருதைப் பெற்றது, கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கத் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைப்படத்திற்கான 70வாவது தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[2]

ஹயவதனா என்ற நாடகத்தில் ஒரு நாடகக் குழுவினர் நடிக்கின்றனர். அந்த நாடகத்தைக் காணவந்த இருவர், அக்குழுவினரை தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைக்கின்றனர். விருந்துக்குப் பிறகு நாடகக் குழுவினர் அதே வீட்டில் தங்குகின்றனர். குழுவில் உள்ள 12 பேரில் ஒரே பெண் அஞ்சலி மட்டுமே. அந்த இரவில் பன்னிரண்டு பேரில் ஒருவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறார். அக்குழுவில் அண்மையில் இணைந்த திரைப்பட நடிகர் ஹரி மீது அக்குற்றம் குறித்த சந்தேக நிழல் படர்கிறது. எனவே அவனைக் குழுவைவிட்டு நீக்குவது குறித்து மற்ற 11 ஆண்களும் கலந்துரையாடுகின்றனர். அவனை வெளியேற்றுவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட முயல்கையில், அந்த முடிவை எடுக்க வேண்டாம் என்றும் அந்த தண்டனை அவசியமா என்று ஒருசிலருடைய கேள்வியாகிறது. அது எப்படி பெரும்பான்மையினரின் கேள்வியாக மாறுகிறது என்பதே கதைப் போக்காக உள்ளது.

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா, இந்திய சர்வதேச திரைப்பட விழா, கேரள சர்வதேச திரைப்பட விழா, ஆகிய விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டைப் பெற ஆட்டம் 5 சனவரி 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[3][4][5][6][7][8]

பாராட்டுகள்

தொகு
ஆண்டு விருது வகை பெறுநர் மேற்கோள்.
2024 70வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த திரைப்படம் ஆனந்த் ஏகர்ஷி [9]
சிறந்த படத்தொகுப்பு மகேஷ் புவனேந்த்
சிறந்த திரைக்கதை ஆனந்த் ஏகர்ஷி
2023 கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள் சிறந்த படம் ஆனந்த் ஏகர்ஷி [10]
சிறந்த துணை நடிகர் கலாபவன் ஷாஜோன்
சிறந்த நடிகை ஜரின் ஷிஹாப்

மேற்கோள்கள்

தொகு
  1. "'Aattam' box office collections: Anand Ekarshi's film crosses Rs 1 crore in 2 weeks". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2024-01-19 இம் மூலத்தில் இருந்து 2024-01-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240119141052/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/aattam-box-office-collections-anand-ekarshis-film-crosses-rs-1-crore-in-2-weeks/articleshow/106991197.cms. 
  2. "Malayalam Movie Aattam Wins National Award For Best Feature Film". Free Press Journal.
  3. "Aattam review: Anand Ekarshi's debut is a gripping critique of gender dynamics". Wion. 21 November 2023. https://www.wionews.com/entertainment/aattam-review-anand-ekarshis-debut-is-a-gripping-critique-of-gender-dynamics-661210. 
  4. "'Aattam' movie review: Anand Ekarshi's assured debut trains a harsh, critical lens on male behaviour". The Hindu. 21 October 2023. https://www.thehindu.com/entertainment/movies/aattam-movie-review-anand-ekarshis-assured-debut-trains-a-harsh-critical-lens-on-male-behaviour/article67445962.ece. 
  5. "ആശയങ്ങളുടെ വാഗ്വാദം, കണ്മുന്നിൽ തെളിയുന്ന രാഷ്ട്രീയം". Mathrubhumi. 15 December 2023. https://www.mathrubhumi.com/special-pages/iffk-2023/reviews/zarin-shihab-vinay-fortt-anand-ekarshi-movie-aattam-review-1.9157175. 
  6. "Aattam: A thoughtful, well-written movie apt for our times". Manorama. 5 January 2024. https://www.onmanorama.com/entertainment/movie-reviews/2024/01/05/aattam-movie-review-vinay-forrt-zarin-shihab-anand-ekarshi.html. 
  7. "Aattam review: Debutant Anand Ekarshi's film is a gripping take on human hypocrisies". The News Minute. 5 January 2024. https://www.thenewsminute.com/kerala/aattam-review-debutant-anand-ekarshis-film-is-a-gripping-take-on-human-hypocrisies. 
  8. "'Aattam' X review: Anand Ekarshi's film wins praise from cinephiles". Times Of India. 5 January 2024. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/aattam-x-review-anand-ekarshis-film-wins-praise-from-cinephiles/articleshow/106575594.cms?from=mdr. 
  9. "70th National Film Awards full list of winners: Brahmastra, Ponniyin Selvan Part 1, Aattam win big" (in en). https://www.hindustantimes.com/entertainment/bollywood/70th-national-film-awards-full-list-of-winners-brahmastra-ponniyin-selvan-part-1-aattam-win-big-101723799613996.html. 
  10. "Kerala Film Critics Awards announced, Aattam adjudged best film" (in en). https://www.thehindu.com/news/national/kerala/kerala-film-critics-awards-announced-aattam-adjudged-best-film/article68168365.ece. 

வெளி இணைப்புகள்

தொகு