ஆட்டின் வடிவில் அரசர் தகர்க்காவைப் பாதுகாக்கும் அமுன் கடவுட் சிலைகள்

ஆட்டின் வடிவில் அரசர் தகர்க்காவைப் பாதுகாக்கும் அமுன் கடவுட் சிலைகள் குறைந்தது இரண்டாவது நூபியாவின் காவாவில் இருந்த அமுன் கோயிலில் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கற்கோயிலின் கட்டுமானம் கிமு 683 ஆம் ஆண்டில் அரசர் தகர்க்காவினால் தொடங்கப்பட்டது. ஆடு, அமுன் கடவுளுக்குப் புனிதமான விலங்குகளுள் ஒன்று. கர்னாக்கில் உள்ள கோயில் உட்பட அமுன் கோயில்கள் பலவற்றில் ஆடு அல்லது ஆட்டுத் தலை கொண்ட "இசிபிங்சு" சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

ஆட்டின் வடிவில் அரசர் தகர்க்காவைப் பாதுகாக்கும் அமுன் கடவுளின் கருங்கற் சிலைகளுள் ஒன்று. இது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

கண்டுபிடிப்பு தொகு

இச்சிலைகள் 1930-1 காலப்பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வின் போது பிரான்சிசு லெவெலின் கிரிபித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. கற்கோயிலின் மேற்குப்பக்க அணுகுவழியில், முதலாம் இரண்டாம் கோபுரங்களுக்கு முன்புறம் இரண்டு சோடி மணற்கல் மேடை இணைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் இரண்டிலேயே ஆட்டு வடிவங்கள் காணப்பட்டன.[1] இவற்றுள் ஒன்று பிரித்தானிய அருங்காட்சியகத்திலும், மற்றது ஆக்சுபோர்டில் உள்ள ஆசுமோலிய அருங்காட்சியகத்திலும் உள்ளன. ஆசுமோலிய அருங்காட்சியகத்திலேயே காவாவில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த பெரும்பாலான தொல்பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.[2] பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள சிலை பேராசிரியர் கிரிபித்திடம் இருந்து 1933ல் பெறப்பட்டது.[3]

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-12-04. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
  2. http://www.ashmolean.org/news/index.php?id=90 The BM website [1] பரணிடப்பட்டது 2009-12-04 at the வந்தவழி இயந்திரம் says it is now at the National Museum of Khartoum; as of March 2009 it was in Oxford as it featured on bus advertisements for the Museum, with a young boy posing in his rugby gear next to the statue.
  3. *"S. R. K. G.", "Granite Ram from the Sudan" British Museum Quarterly 8, online at [2]