ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்

(ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் (ICC Test Player of the Year) என்பது 2004 ஆம் ஆண்டில் இருந்து அந்தந்த ஆண்டுகளில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.இதனை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வழங்குகிறது. இந்த விருதானது ஆண்டுதோறும் வழங்கப்படும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் விருதுகளில் ஒன்றாகும்.[1]

ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான ஐசிசி விருது
விளக்கம்ஆண்டுதோறும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கப்படுவது
வழங்குபவர்ஐசிசி
முதலில் வழங்கப்பட்டதுஇந்தியா ராகுல் திராவிட் (2004)
கடைசியாக வழங்கப்பட்டதுஆத்திரேலியா ஸ்டீவ் சிமித் (2017)
இணையதளம்https://www.icc-cricket.com/awards Edit on Wikidata

தேர்வு

தொகு

இந்த விருதானது 56 நபர்கள் கொண்ட அவையின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் இதில் 50 நபர்கள் இருந்தனர். இந்த அவையில் தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் நாடுகளின் அணியின் தலைவர்கள் 10 பேர், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவில் உள்ள 18 பேர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் செய்தியாளர்கள் 28 பேர் உள்ளனர். இந்தக் குழுவின் முடிவில் சம நிலை ஏற்பட்டால் விருது பகிந்தளிக்கப்படும்.

விருது பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றியாளர் பரிந்துரைக்கப்பட்ட ஏனையோர்
2004   ராகுல் திராவிட்
2005   ஜாக் கலிஸ்

  இன்சமாம் உல் ஹக்
  அடம் கில்கிறிஸ்ற்
  கிளென் மெக்ரா
  ஷேன் வோர்ன்

2006   ரிக்கி பாண்டிங்

  முகம்மது யூசுப்
  மைக்கேல் ஹசி
  மகேல ஜயவர்தன
  ஷேன் வோர்ன்

2007   முகம்மது யூசுப்

  ரிக்கி பாண்டிங்
  மகேல ஜயவர்தன
  முத்தையா முரளிதரன்
  முகம்மது ஆசிப்

2008   டேல் ஸ்டெய்ன்

  சிவ்நாராயின் சந்தர்பால்

  மகேல ஜயவர்தன
  ஜாக் கலிஸ்

2009   கவுதம் கம்பீர்

  மிட்செல் ஜோன்சன்
  திலன் சமரவீர
  ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ்

2010   வீரேந்தர் சேவாக்

  சச்சின் டெண்டுல்கர்
  அசீம் ஆம்லா
  டேல் ஸ்டெய்ன்

2011   அலஸ்டைர் குக்
2012   குமார் சங்கக்கார
2013   மைக்கல் கிளார்க்
2014   மிட்செல் ஜோன்சன்
2015   ஸ்டீவ் சிமித்
2016   ரவிச்சந்திரன் அசுவின்
2017   ஸ்டீவ் சிமித்

மேற்கோள்கள்

தொகு
  1. "Live Cricket Scores & News International Cricket Council", www.icc-cricket.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-02