ஆண் தேனீக்கள் கூடுமிடம்

ஆண் தேனீக்கள் கூடுமிடம் (Drone congregation area) என்பது ஆண் தேனீக்களும் கன்னி இராணி தேனீக்களும் இணையும் ஒரு வான்வெளிப் பகுதியாகும்.

ஆண் தேனீ புகைப்படம் யு. எஸ். ஜி. எஸ். தேனீ சரக்கு மற்றும் கண்காணிப்பு ஆய்வகம்

அமைப்பு

தொகு

ஆண் தேனீக்கள் கூடுமிடமானது பொதுவாக வான்வெளியில் சுமார் 100 மீட்டர் (300) விட்டத்தில் தரையிலிருந்து சுமார் 15 முதல் 30 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவை மேல்நோக்கிய மிகக்குறுகிய கூம்பு வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆண் தேனீக்கள் எண்ணிக்கை மேற்பகுதியில் குறைவாகக் காணப்படும்.[1] இப்பகுதியின் எல்லைகள் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைக்கு வெளியே தேனீக்களின் கலவி நடைபெறுவதில்லை.[2]

ஒரு நாளில், சுமார் 12,000 ஆண் தேனீக்கள் கூடுமிடத்திற்கு வருகின்றன. மேலும் இத்தேனீக்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் வெவ்வேறு கூட்டமைப்பிலிருந்து பங்கேற்கலாம்.[3][4] இருப்பினும், இந்த எண்ணிக்கை சூழ்நிலைகளைப் பொறுத்து மிகவும் மாறுபடும்.[5]

புவியியல் அம்சங்கள்

தொகு

ஆண் தேனீக்கள் கூடுமிடம் எவ்வாறு அமைகின்றது அல்லது தேனீக்கள் இப்பகுதியினை எவ்வாறு கண்டுபிடிக்கின்றன என்பது சரியாகத் தெரியவில்லை.[6][7][8] இருப்பினும், இவை நிலப்பரப்பின் நிலையான அம்சங்களைப் பொறுத்தது என்பதற்குக் கணிசமான சான்றுகள் உள்ளன. இராணி தேனீக்கள் இல்லாதபோதும் ஆண் தேனீக்கள் இந்த பகுதிகளில் கூடி, ஆண்டுதோறும் இதே போன்ற பகுதிகளில் கூடுகின்றன. இத்தகைய ஆண் தேனீக்கள் கூடுமிடம் 200 ஆண்டுகள் ஆனாலும் ஒரே இடத்தில் இருக்கும்.[9][10] வெளிப்பகுதியிலிருந்து வரும் ஆண் தேனீக்கள் கூட இத்தகைய கூடுமிடங்களை எளிதில் கண்டுபிடிக்கின்றன.[10]

பெரும்பாலான ஆண் தேனீக்கள் கூடுமிடம் பாதுகாப்பு தடையால் சூழப்பட்ட திறந்தவெளிகளாகும். திறந்த பகுதி என்பது தேனீக்களுக்கு தெரிநிலையை வழங்குகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு தடை (தாவரங்கள், மலைகள் போன்றவை) காற்று போன்று சூழல் காரணிகளிலிருந்து பாதுகாப்பினை அளிக்கிறது.[2] தேனீக்களும் குறைந்த உயரத்திற்குப் பறக்க முனைகின்றன.[11][12] வடக்கு அரைக்கோளத்தில் தெற்கு நோக்கிய இடங்கள் விரும்பப்படுகின்றன. இது சூரிய ஒளிவீச்சு அல்லது தேனீக்களின் காந்தப் பகுப்பாய்வு வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம்.[13]

பறக்கும் பாதைகள்

தொகு

ஆண் தேனீக்கள் பறக்கும் பாதைகள், குறிப்பிட்ட பகிரப்பட்ட பாதைகள் வழியாக ஆண் தேனீக்கள் கூடுமிடத்திற்கு வழியைக் காண்கின்றன. இவை பொதுவாக மரங்களின் வரிசைகள் போன்ற நிலப்பரப்பில் உள்ள அம்சங்களைப் பின்பற்றுகின்றன. ஆண் தேனீக்கள் கூடுமிடம் பெரும்பாலும் பறக்கும் பாதைகளின் குறுக்கே காணப்படும்.[1] ஆண் தேனீக்கள் கூடுமிடங்கள் போலப் பறக்கும் பாதைகளும் பல ஆண்டுகளாக நிலையானவையாக உள்ளன.[7]

இயக்குநீரின் பங்கு

தொகு

இராணி இருக்கும் சரியான இடத்திற்கு ஆண் தேனீக்களை ஈர்ப்பதில் இயக்குநீர் (பெரோமோன்கள்) பங்கு வகிக்கின்றன. ஆண் தேனீக்கள் கூடுமிடத்தினை கண்டுபிடிப்பதற்கான பன்னாட்டுத் தேனீ ஆராய்ச்சி சங்கத்தின் நிலையான நடைமுறையில் ஒரு இராணி அல்லது ஒரு (இயக்குநீரால் குறிக்கப்பட்ட) போலி இராணியைப் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டது. பரவலான ஆண் தேனீக்கள் எவ்வாறு ஒரு கூடுமிடப் பகுதியின் தொகுதியாகச் சேருகின்றன எனக் கண்டறியப்பட்டது.[8] ஆண் தேனீக்கள் இராணி தேனீக்களை ஈர்ப்பது போல, ஆண் தேனீக்கள் ஆண் தேனீக்களையும்,[14] கன்னி இராணித் தேனீக்கள் ஆண் தேனீக்களையும் ஆண் தேனீக்கள் கூடுமிடத்திற்கு ஈர்க்கின்றன.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Loper, Gerald M.; Wolf, Wayne W.; Taylor, Orley R. (1992). "Honey Bee Drone Flyways and Congregation Areas: Radar Observations". Journal of the Kansas Entomological Society 65 (3): 223–230. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-8567. 
  2. 2.0 2.1 Winston 1987, ப. 204.
  3. Koeniger, Nikolaus; Koeniger, Gudrun; Gries, Michael; Tingek, Salim (April 2005). "Drone competition at drone congregation areas in four Apis species". Apidologie 36 (2): 211–221. doi:10.1051/apido:2005011. 
  4. Baudry, E.; Solignac, M.; Garnery, L.; Gries, M.; Cornuet, J.; Koeniger, N. (22 October 1998). "Relatedness among honeybees (Apis mellifera) of a drone congregation". Proceedings of the Royal Society of London. Series B: Biological Sciences 265 (1409): 2009–2014. doi:10.1098/rspb.1998.0533. 
  5. Winston 1987, ப. 206.
  6. Koeniger, N.; Koeniger, G.; Pechhacker, H. (February 2005). "The nearer the better? Drones (Apis mellifera) prefer nearer drone congregation areas". Insectes Sociaux 52 (1): 31–35. doi:10.1007/s00040-004-0763-z. 
  7. 7.0 7.1 Woodgate, Joseph L.; Makinson, James C.; Rossi, Natacha; Lim, Ka S.; Reynolds, Andrew M.; Rawlings, Christopher J.; Chittka, Lars (June 2021). "Harmonic radar tracking reveals that honeybee drones navigate between multiple aerial leks". iScience 24 (6): 102499. doi:10.1016/j.isci.2021.102499. பப்மெட்:34308279. 
  8. 8.0 8.1 Scheiner, Ricarda; Abramson, Charles I; Brodschneider, Robert; Crailsheim, Karl; Farina, Walter M; Fuchs, Stefan; Grünewald, Bernd; Hahshold, Sybille et al. (January 2013). "Standard methods for behavioural studies of Apis mellifera". Journal of Apicultural Research 52 (4): 44–45. doi:10.3896/IBRA.1.52.4.04. 
  9. Loper, Gerald M.; Wolf, Wayne W.; Taylor Jr., Orley R. (1987). "Detection and monitoring of honeybee drone congregation areas by radar". Apidologie 18 (2): 163–172. doi:10.1051/apido:19870206. 
  10. 10.0 10.1 Tribe, G. D. (1982). "Drone mating assemblies". South African Bee Journal 54: 99–100. 
  11. Pechhacker, H. (1994). "Physiography influences honeybee queen's choice of mating place (Apis mellifera carnica Pollmann)". Apidologie 25 (2): 239–248. doi:10.1051/apido:19940210. 
  12. Hayashi, Shinya; Satoh, Toshiyuki (July 2021). "Landscape features causing the local congregation of honeybee males (Apis mellifera L.)". Ethology 127 (7): 582–591. doi:10.1111/eth.13165. 
  13. Galindo-Cardona, Alberto; Monmany, A. Carolina; Moreno-Jackson, Rafiné; Rivera-Rivera, Carlos; Huertas-Dones, Carlos; Caicedo-Quiroga, Laura; Giray, Tugrul (October 2012). "Landscape Analysis of Drone Congregation Areas of the Honey Bee, Apis mellifera". Journal of Insect Science 12 (122): 122. doi:10.1673/031.012.12201. பப்மெட்:23451901. 
  14. Brandstaetter, Andreas S.; Bastin, Florian; Sandoz, Jean-Christophe (15 April 2014). "Honeybee drones are attracted by groups of consexuals in a walking simulator". Journal of Experimental Biology 217 (Pt 8): 1278–1285. doi:10.1242/jeb.094292. பப்மெட்:24436379. 
  15. Bastin, Florian; Cholé, Hanna; Lafon, Grégory; Sandoz, Jean-Christophe (24 July 2017). "Virgin queen attraction toward males in honey bees". Scientific Reports 7 (1): 6293. doi:10.1038/s41598-017-06241-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:28740234. 

குறிப்புகள்

தொகு
  • Winston, Mark (1987). The Biology of the Honey Bee. Cambridge, Mass.: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-07408-8. இணையக் கணினி நூலக மைய எண் 24079339.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்_தேனீக்கள்_கூடுமிடம்&oldid=3993147" இலிருந்து மீள்விக்கப்பட்டது