ஆதாம் குனிவு சோதனை

ஆதாம் குனிவு சோதனை (Adams Forward Bend) வளைந்த முதுகெலும்பைக் கண்டறிய பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு சோதனையாகும். ஆனாலும் வளைந்த முதுகெலும்பைக் கண்டறிய இச்சோதனை முதன்மைப் பரிசோதனையாகக் கருதப்படுவதில்லை. [1]

முதுகெலும்புப் பக்க வளைவு, முதுகெலும்பு வளைவு நோய், வளை முதுகு என்ற பெயர்களாலும் இப்பரிசோதனை அழைக்கப்படுகிறது.

வளை முதுகு சிக்கல் பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்படலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இந்நோய் உண்டாகிறது. முதுகெலும்பு வளைவு நோயால் பாதிக்கப்படும் 100 பேரில் வளர் இளம்பருவத்தினர் 6 பேர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்நோயால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.[2]

வளை முதுகெலும்பு நோயைக் கண்டுபிடிக்க இந்த சோதனை பெரும்பாலும் பள்ளிகள் மற்றும் மருத்துவர் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. சோதனையின்போது நோயாளி நீரில் தலைகீழாக குதிக்க வளைவது போல முன்னோக்கி வளைகிறார். நோயாளிக்கு வளை முதுகு சிக்கல் இருந்தால் அவர் முதுகில் பெரும்பாலும் முதுகெலும்பு இருக்கும் இடத்தில் முக்கிய கோடு ஒன்று இருக்கும், ஒரு பக்கம் அடுத்த பக்கத்தை விட சற்று அதிகமாகவும் இருக்கும். நோயாளிக்கு வளை முதுகு சிக்கல் இல்லையென்றால் அவர் முதுகு முற்றிலும் நேராக இருக்கும்.

வில்லியம் ஆடம்சு 1865 ஆம் ஆண்டு வளை முதுகைக் கண்டறிய முன்னோக்கி வளையும் சோதனையை விவரித்தார். பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் புவியியலாளர் கிதியோன் மாண்டலின் பிரேத பரிசோதனையிலிருந்து வளை முதுகு தொடர்பான புரிதல் ஆடம்சுக்கு கிடைத்தது. மாண்டலின் மருத்துவ வரலாறு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Forward bend test: MedlinePlus Medical Encyclopedia Image".
  2. "முதுகெலும்பு வளைவு நோய்க்கு சிகிச்சை". Dinamalar. 2018-09-06. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  3. Fairbank, Jeremy (2004-09-01). "Historical perspective: William Adams, the forward bending test, and the spine of Gideon Algernon Mantell". Spine 29 (17): 1953–1955. doi:10.1097/01.brs.0000137072.41425.ec. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-1159. பப்மெட்:15534423. https://pubmed.ncbi.nlm.nih.gov/15534423/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாம்_குனிவு_சோதனை&oldid=3179888" இலிருந்து மீள்விக்கப்பட்டது