ஆதிரெட்டி பவானி
இந்திய அரசியல்வாதி
ஆதிரெட்டி பவானி (Adireddy Bhavani) (பிறப்பு 1984 அல்லது 1985 ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக ராஜமன்றி நகர்ப்புற சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆதிரெட்டி பவானி | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | அக்ல சத்யநாராயணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1984 or 1985 (அகவை 39–40) |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | ஆதிரெட்டி சிறீநிவாசா |
உறவுகள் | ராம் மோகன் நாயுடு (சகோதரன்) கிஞ்சராபு அச்சன் நாயுடு (உறவினர்) |
பெற்றோர் | கிஞ்சராபு எர்ரான் நாயுடு (தந்தை) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஆதிரெட்டி பவானி முன்னாள் மத்திய அமைச்சர் கிஞ்சராபு எர்ரான் நாயுடுவின் மகளும் ராம் மோகன் நாயுடுவின் சகோதரியும் ஆவார். ஐஐஎல்எம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். சட்ட மேலவை உறுப்பினரான ஆதிரெட்டி அப்பா ராவின் மகன் ஆதிரெட்டி சிறீநிவாசை மணந்தார்.[1][2][3]
அரசியல் வாழ்க்கை
தொகுஆதிரெட்டி பவானி 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜமன்றி நகர்ப்புற சட்டப்பேரவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "ఆంధ్రప్రదేశ్ అసెంబ్లీ ఎన్నికల్లో గెలిచిన యువత వీళ్లే" (in te). BBC News తెలుగు. https://www.bbc.com/telugu/india-48392475.
- ↑ Talari, Yadedya (6 March 2019). "TDP leader Yerram Naidu's daughter to contest from Rajamahendravaram". The Hans India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.
- ↑ "Adireddy Bhavani(TDP):Constituency- RAJAHMUNDRY CITY(EAST GODAVARI) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.