ஆத்மே (Atme) ( அரபு மொழி: اطمه‎, romanized: ‘Aṭma , ஆத்மா, அத்திமா, அத்மேஹ் என்றும் உச்சரிக்கப்படுகிறது ) என்பது வடக்கு சிரியாவில் உள்ள ஒரு நகரம் ஆகும். நிர்வாக ரீதியாக இதுலிபு ஆளுநரகத்தின் ஒரு பகுதியாகும், இது இதுலிபின் வடக்கே மற்றும் துருக்கியின் எல்லைக்கு கிழக்கே அமைந்துள்ளது. [1] இந்த நகரம் டெய்ர் பலுட்டின் தென்கிழக்கிலும், ஜின்டிரேஸின் தெற்கிலும், காஹ்வின் வடமேற்கு மற்றும் சர்மடா மற்றும் அல்-டானாவின் வடக்கிலும் அமைந்துள்ளது. சிரியாவின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் 2004 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், இது 2,255 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.

வரலாறு தொகு

ஆலிவ் மர முகாம் என்பது சிரிய உள்நாட்டுப் போரின் போது உருவான அகதிகள் முகாம் ஆகும். அக்டோபர் 2011 முதல், துருக்கிக்கு செல்லத் தவறிய உள்நாட்டில் இடம்பெயர்ந்த சிரியர்கள் ஆலிவ் மரங்களுக்கு இடையில் குடியேறத் தொடங்கினர். இந்த முகாமில் 28,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் என மரம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.[எப்போது?] ]

ஆத்மேயில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான ஓக் மரம் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இசுலாமிய அரசு ஈராக் மற்றும் லெவன்ட் உறுப்பினர்களால் வெட்டப்பட்டது. உள்ளூர்வாசிகள் கடவுளுக்கு பதிலாக மரத்தை வணங்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். [2] இந்த நகரம் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 
குரைஷி

ஐ.எஸ்.ஐ.எல் தலைவர் அபு இப்ராஹிம் அல்-குராசி பிப்ரவரி 3, 2022 அன்று இந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டில் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய சோதனையின் போது கொல்லப்பட்டார். மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, தாக்குதலின் போது ஏழு பொதுமக்கள் உட்பட பதின்மூன்று பேர் இறந்தனர், இது அதன் தீவிரத்திற்காக ஊடகங்களால் குறிப்பிடப்பட்டது. [3]

குரைஷியின் நில உரிமையாளர் உட்பட, அந்த ஊரில் குரைஷி இருப்பதைப் பற்றி உள்ளூர்வாசிகள் பலர் "அதிர்ச்சியடைந்தனர்", அவருடைய குத்தகைதாரர் ஐஎஸ்ஐஎல் அமைப்பின் தலைவர் என்பது அவருக்குத் தெரியாது. [4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மே&oldid=3385041" இருந்து மீள்விக்கப்பட்டது