ஆந்திர நாடு

ஆந்திர நாடு (Andhra in Indian epic literature), (தெலுங்கு: ఆంధ్ర), மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தின் தெற்கில் அமைந்த நாடுகளில் ஒன்று. தற்போது இந்நாடு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.

மகாபாரத இதிகாச கால நாடுகள்

கோதாவரி ஆற்றாங்கரையில் வாழ்ந்த ஆந்திரர்கள் குறித்து வாயு புராணம் மற்றும் மச்ச புராணங்களில் குறித்துள்ளது.

தருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள் தொகு

இந்திரப்பிரஸ்த நகரத்தில், தருமராசா நடத்திய பெரும் இராசசூய வேள்வியில், பரத கண்டத்தின் மன்னர்கள் பெரும்பாலன மன்னர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர நாட்டு மன்னரும், வேள்வியில் கலந்து கொண்டு, பெரும் பரிசுகளை தருமருக்கு வழங்கினார் என மகாபாரதம் கூறுகிறது.[1] (மகாபாரதம் 2: 33)

குருச்சேத்திரப் போரில் ஆந்திரர்கள் தொகு

குருச்சேத்திரப் போரில், ஆந்திர நாட்டுப் படைவீரர்கள், பாண்டவர் அணியிலும், (மகாபாரதம் 5: 140 & 8:12) சிலர் கௌரவர் அணியிலும் இணைந்து போரிட்டனர்.[2](மகாபாரதம் 5: 161, 5: 162, 8:73).

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_நாடு&oldid=2226572" இலிருந்து மீள்விக்கப்பட்டது