ஆபரண மலர் கும்பிடுபூச்சி

பூச்சி இனம்
ஆபரண மலர் கும்பிடுபூச்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டாக்சோடெரிடே
பேரினம்:
செரோபுரோடெர்
இனம்:
செ. ஜெம்மேடசு
இருசொற் பெயரீடு
செரோபுரோடெர் ஜெம்மேடசு
சாசூரெ, 1869

செரோபுரோடெர் ஜெம்மேடசு (Creobroter gemmatus) என்பது ஆபரண மலர் கும்பிடுபூச்சி எனப் பொதுவாக அறியப்படுகிறது. இது ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கும்பிடுபூச்சி சிற்றினமாகும்.

விளக்கம்

தொகு

ஆபரண மலர் கும்பிடுபூச்சியின் ஆண் சுமார் 3.8 செமீ வரை வளரக்கூடியது. இதில் பெண் பூச்சிகள் ஆண் பூச்சிகளை விடச் சற்று பெரியவை. இவை ஈரப்பதமான சூழலையே விரும்புகின்றன. பெண் பூச்சிகள் தன்னின உண்ணிகளாக உள்ளன. ஆண் பூச்சிகள் சமூக வாழ்வினையே விரும்புகின்றன.

உணவு மற்றும் சூழல் வெப்பநிலை அடிப்படையில் எட்டு முறை தோலுரித்தலை மேற்கொண்டு 2 முதல் 5 மாதங்களுக்குள் முதிர்ச்சியடைகின்றன. இவை மிகச்சிறியவை. செரோபுரோடெர் பேரினத்தில் மிகவும் பரவலாகக் காணப்படும் சிற்றினமாக இது உள்ளது.[1]

ஒவ்வொரு முட்டைத் தொகுப்பிலும் 50 முட்டைகள் வரை இருக்கலாம். உகந்த நிலைமைகளின் கீழ், 5 வாரங்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிப்படும்.[2]

மேற்கோள்கள்

தொகு