ஆர்க்டிக் பெருஞ்சூறாவளி

ஆர்க்டிக் பெருஞ்சூறாவளி[1] (Great Arctic Cyclone) 2012 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தின் முற்பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடலில் மையங்கொண்ட ஒரு வெப்பமண்டல சேய்மைப்புயல் ஆகும். ஆர்க்டிக் சமுத்திரத்தில் பெரும்பாலும் குளிர் காலத்தில் மட்டும் தோன்றும் இத்தகைய புயல்கள் கோடை காலத்தில் தோன்றுவது மிகவும் அரிதாகும். 1979 ஆம் ஆண்டு தொடங்கிய செயற்கைக் கோள் கண்காணிப்புத் தரவுப் பதிவுகளில் 13 ஆவது வலிமையான புயலாகவும், மிகவும் வலிமையான கோடைக்காலப் புயலாகவும் 2012 ஆம் ஆண்டின் ஆர்க்டிக் பெருஞ்சூறாவளி கருதப்படுகிறது.[2][3]

ஆகத்து 5, 2012 இல் அலாசுகா கடற்கரையில் உருவான ஆர்க்டிக் பெருஞ்சூறாவளியின் செயற்கைக்கோள் புகைப்படம் (மையத்தில்) வழக்கத்திற்கு மாறாக பெருஞ்சூறாவளியாகத் தோன்றி ஆர்க்டிக் பெருங்கடலின் மையத்தின் வழியாகச் செல்லும் போது கலைந்தது.

2012 ஆம் ஆண்டில் தோன்றிய இந்த ஆர்க்டிக் பெருஞ்சூறாவளியால் கடல் பனிக்கட்டிகள் எதுவும் உருகவில்லை என்றாலும் இப்புயல் விளைவாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக , ஆழ்கடலில் இருந்து மேலே வந்த சூடான உப்புநீர், கடல் பனிக்கட்டிகளின் உருகுதலுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது[4].

மேற்கோள்கள் தொகு

  1. "Arctic storm part 1: in progress". Arctic Sea Ice Blog. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.
  2. Michael D. Lemonick (December 27, 2012). "Great Arctic Cyclone in Summer ‘Unprecedented’". Climate Central. http://www.climatecentral.org/news/last-summers-great-arctic-cyclone-unprecedented-says-new-study-15415. பார்த்த நாள்: March 6, 2013. 
  3. Simmonds, Ian; Irina Rudeva (December 2012). "The great Arctic cyclone of August 2012". Geophysical Research Letters 39 (23). doi:10.1029/2012GL054259. Bibcode: 2012GeoRL..3923709S. http://onlinelibrary.wiley.com/doi/10.1029/2012GL054259/abstract. பார்த்த நாள்: March 6, 2013. 
  4. Hannah Hickey. "Cyclone did not cause 2012 record low for Arctic sea ice". University of Washington. பார்க்கப்பட்ட நாள் March 6, 2013.