ஆர்த்தர் இலிந்து

எசுத்தோனிய மூலக்கூற்று உயிரியலாளார்

ஆர்த்தர் இலிந்து (Artur Lind) எசுத்தோனியா நாட்டைச் சேர்ந்த ஓர் உயிரியலாளர் ஆவார். இவர் 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் எசுத்தோனியாவின் வாந்திரா நகரத்தில் பிறந்தார். எசுத்தோனியாவின் மூலக்கூற்று உயிரியலின் நிறுவனர் என்று ஆர்த்தர் இலிந்து கருதப்படுகிறார். [1]

எசுத்தோனியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான டார்ட்டு நகரிலுள்ள டார்ட்டு பல்கலைக்கழகத்தில் இவர் மருத்துவம் படித்தார்.

அந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்ட வலி நிவாரணி மருந்துகளுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இவரால் தொடர்ந்து ஓர் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்ற முடியவில்லை. அதற்கு பதிலாக உயிர் வேதியியல் கற்பித்தலுக்கான கல்வியாளராக இவர் மாறினார். .[2]

5எசு இரைபோசோம் வகை நீண்ட ஆர்.என். ஏ. வை ஆர்த்தர் இலிந்து கண்டுபிடித்தார். [2] இவரது எச்சங்கள் டார்டுவில் உள்ள வனா-யானி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. [3] அலெமிசுட்டே நகரத்தில் உள்ள செபபாயா 6 அலுவலக கட்டிடம் ஆர்த்தர் இலிந்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. [1]

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் ஆர்த்தர் இலிந்து காலமானார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Artur Lindi maja". http://ulemistecity.ee/innovators/artur-lind/. 
  2. 2.0 2.1 Maidla, Margus (14 October 2016). "Ruum, kus sündis Eesti molekulaarbioloogia" (in et). https://www.sirp.ee/s1-artiklid/c21-teadus/ruum-kus-sundis-eesti-molekulaarbioloogia/. 
  3. "Artur Lind`i (1927 - 1989) haud". https://info.raad.tartu.ee/muinsus.nsf/bf088249cbe7e9c9c2256873003aedd6/162e3ef7a101cd74c2256efd00425cea. 
  4. Piirsalu, Hiie (28 August 2015). "Arstid: algus eelmises lehes" (in et). https://dea.digar.ee/cgi-bin/dea?a=d&d=vandra20150828.2.15&st=1&l=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தர்_இலிந்து&oldid=2977121" இருந்து மீள்விக்கப்பட்டது