ஆர்த்தர் மில்னே

பிரித்தானிய வானியற்பியலாளர், கணிதவியலாளர்

எட்வார்டு ஆர்த்தர் மில்னே (Edward Arthur Milne) அ க உ (FRS)[1] (/ˈmɪln/; 14 பிப்ரவரி 1896 – 21 செப்டம்பர் 1950) ஒரு பிரித்தானிய வானியற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.[2][3][4][5][6]

ஆர்த்தர் மில்னே
Arthur Milne
பிறப்பு(1896-02-14)14 பெப்ரவரி 1896
கிங்சுடன் அப்பான் கல், யார்க்சயர், இங்கிலாந்து
இறப்பு21 செப்டம்பர் 1950(1950-09-21) (அகவை 54)
டப்லின், அயர்லாந்து
பணியிடங்கள்மான்செசுட்டர் விக்டோரியா பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
தாமசு கவ்லிங்
அறியப்படுவதுமில்னே படிம்ம்

வாழ்க்கை தொகு

மில்னே இங்கிலாந்து, யார்க்சயரில் உள்ள கல்லில் பிறந்தார். இவர் கைமெர்சு கல்லூரியில் சேர்ந்து அங்கே கணிதவியல், இயற்கை அறிவியல் கல்விக்கான நல்கையை கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் படிக்க 1914 இல் வென்றுள்ளார். இவர் இத்தேர்வில் இதற்காக இதுவரை பெறாத அளவு உயர்மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இவர் 1916 இல் ஏ. வி. கில்லின் கனிதவியல் குழுவில் சேர்ந்தார். இக்குழு படைக்கருவிகல் அமைச்சகத்துக்காக வான்களத் தாக்கத் தகரியின் எறிபடையியலில் பணிபுரிந்தது. இவர்கள் கில் படைப் பிரிவினர் எனப்பட்டனர். பின்னர் இவர் ஒலி இருப்பறிதைல் சிறப்பு வல்லுனரானார்.[7] இவர் அரசு ந்வாயியல் தன்னார்வ இருப்புப்படையில் 1917 இல் தளபதி ஆனார். இவர் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியின் உறுப்பினராக 1919 முதல்1925 வரையில் இருந்தார். இவர் சூரிய இயற்பியல் வான்காணகத்தில் உதவி இயக்குநராக 1920 முதல் 1924 வரையிலும் டிரினிட்டியில் விரிவுரையாளராக 1924–1925 இலும்பல்கலைக்கழக வானியற்பியல் விரிவுரையாளராக 1922 முதல் 1925 வரையிலும் இருந்தார். இவர் 1924 முதல் 1928 வரையில் மான்செசுட்டர் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பயன்முறைக் கணிதவியல் பேயர் பேராசிரியராக இருந்தார். பீனர் 1928 இல் இரவுசு பால் கணிதவியல் பேராசிரியராகி ஆக்சுபோர்டு வாதாம் கல்லூரி ஆய்வுநல்கையையும் பெற்றார் . இவரது தொடக்கநிலைப் பணிகள் கணித வானியற்பியலி அமைந்தன. இஅவர்து 1930 களின் ஆய்வுகள் சார்பியல் கோட்பாட்டிலும் அண்டவியலிலும் அமைந்தன. விண்மீன்களின் அக்க் கட்டமைப்பு பற்றிய இவரது பிந்தைய பணிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இவர் அரசு வானியல் கழகத்தின் தலைவராக 1943–1945 இல் விளங்கினார். இரண்டாம் உலகப் போரின்போது எறிபடையியலில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். இவர் அயர்லாந்தில் உள்ள டப்ளினில் விரிவுரைகள் ஆற்ற ஆயத்தத்தில் முனைந்திருந்தபோது மாரடைப்பால் இறந்தார். இந்தவிரிவுரைகள் இவரது புத்தியல் அன்டவியலும் கடவுள் பற்றிய கிறித்தவ எண்ணக்கருவும் (Modern Cosmology and the Christian Idea of God (1952) எனும் தலைப்பில் பின்னர் வெளியிடப்பட்ட நூல்களில் தரப்பட்டுள்ளன.

கல் பல்கலைக்கழகத்தில் 2015 இல் திறக்கப்பட்ட ஈ. ஏ. மில்னே வானியறபியல் மையம்[8] இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

தகைமைகள் தொகு

விருதுகள்

இவர் பெயர் இடப்பட்டவை

  • நிலாவின் மில்னே குழிப்பள்ளம்

மில்னேவின் நூல்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. William McCrea (astronomer) (1951). "Edward Arthur Milne. 1896-1950". Obituary Notices of Fellows of the Royal Society 7 (20): 420–426. doi:10.1098/rsbm.1951.0010. 
  2. O'Connor, John J.; Robertson, Edmund F., "ஆர்த்தர் மில்னே", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  3. William McCrea (astronomer) (1951). "Edward Arthur Milne". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 111 (2): 160–170. doi:10.1093/mnras/111.2.160a. Bibcode: 1951MNRAS.111R.160.. http://articles.adsabs.harvard.edu/full/1951MNRAS.111R.160.. பார்த்த நாள்: 10 June 2016. 
  4. Harry Hemley Plaskett (1951). "Edward Arthur Milne". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 111 (2): 170–172. doi:10.1093/mnras/111.2.160a. Bibcode: 1951MNRAS.111R.160.. http://articles.adsabs.harvard.edu/full/1951MNRAS.111R.160./0000170.000.html. பார்த்த நாள்: 10 June 2016. 
  5. William McCrea (astronomer) (1950). "Edward Arthur Milne". The Observatory 70 (859): 225–232. Bibcode: 1950Obs....70..225M. http://articles.adsabs.harvard.edu/full/1950Obs....70..225M. பார்த்த நாள்: 10 June 2016. 
  6. "Obituary: Edward Arthur Milne". Journal of the British Astronomical Association (British Astronomical Association) 61 (3): 75–77. 1951. Bibcode: 1951JBAA...61R..75.. http://articles.adsabs.harvard.edu/full/1951JBAA...61R..75.. பார்த்த நாள்: 10 June 2016. 
  7. Van der Kloot, W.(2011). ″Mirrors and smoke: A. V. Hill, his brigands, and the science of anti-aircraft gunnery in world war I.″ Notes Rec. R. Soc. Lond. 65: 3–410.
  8. "E.A. Milne Centre for Astrophysics, University of Hull - University of Hull".

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தர்_மில்னே&oldid=3316614" இலிருந்து மீள்விக்கப்பட்டது