ஆர்த்தி மஜும்தார்
ஆர்த்தி மஜும்தார் (Aarti Majumdar) 1978 மார்ச் 3 அன்று பிறந்த, அவரது மேடை பெயரான "ஆர்த்தி மான்" என்ற பெயரில் நன்கு அறியப்பட்ட இந்திய-அமெரிக்க நடிகை ஆவார். ஹீரோஸ் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் நடித்திருக்கிறார். 'தி பிக் பேங் தியரியில் பிரியா குத்ரப்பல்லி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்படுகிறார்.[1][3]
ஆர்த்தி மன் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 3, 1978 கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடு |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ்[1] |
தேசியம் | அமெரிக்கன் |
மற்ற பெயர்கள் | ஆர்த்தி மஜூம்தார்[1] |
கல்வி | ஷாடி சைட் அகாடமி, நியூயார்க் பல்கலைக்கழகம்[1] |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2006 முதல் தற்போது வரை |
அறியப்படுவது | தி பிக் பேங் தியரி[2] |
சொந்த ஊர் | பாக்ஸ் சாப்பல், பென்சில்வேனியா[1] |
தொலைக்காட்சி | தி பிக் பேங் தியரி |
பெற்றோர் | வசந்தி மஜும்தார் (அம்மா)[1][3] |
வாழ்க்கைத் துணை | புர்வேஷ் மன்காட் |
பிள்ளைகள் | நிகிதா (மகள்)[1][3] |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுமன், இது அவரது திருமண பெயரின் சுருக்கமாகும்,[1] மார்ச் 3, 1978 இல் கனெக்டிகட்டில்[1] பிறந்த இவர் முதல் தலைமுறை இந்திய அமெரிக்க[4] வம்சாவளியைச் சேர்ந்தவர்.
அவரது பெற்றோர்களுக்கு மன் இன்னும் ஒரு சிறு குழந்தை தான், மூத்த சகோதரி கிருதி இன்னொரு சகோதரி, கிருட்டி மற்றும் இளைய சகோதரர் நிஷாத் ஆகியோருடன், பென்சில்வேனியாவைச் சுற்றி பல இடங்களுக்குச் சென்றார்.[1] அவள் ஒரு சிறு குழந்தையாக இருந்தபோது பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, மவுன்ட் லெபனான், வேக்ஸ்ஃபோர்ட், பாக்ஸ் சேப்பல் போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளார்.[1] அவரது தாயார், வசந்தி மஜும்தார், பிட்ஸ்பர்க் மருத்துவ மைய (UPMC) பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர், இன்னும் பாக்ஸ் சேப்பலில் வசிக்கிறார் மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் ஆவார்.[1][3] மன்னின் த்ந்தையும் ஒரு மருத்துவர் ஆவார்.,[4] அவர் உயர்நிலை பள்ளியில் இருந்தபோது இவரது தந்தை இறந்தார்.[1]
பாயின்ட் பிரீஸ் என்ற இடத்தில் உள்ள ஷாடி சைட் அகடமி உயர் நிலைப்பள்ளியில் படித்த போது மன் ஒருபோதும் நடிப்பில் ஈடுபட்டதில்லை, ஆனாலும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடிப்பு பயின்ற அவர் திரைக் கதை மற்றும் இயக்கம் போன்றவற்றில் பட்டம் பெற்றார்.[1][3]
தொழில்
தொகு2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடிக்க ஆரம்பித்த இவர், ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடித்தார். அவர் ஆர்த்தி மஜும்தார் மற்றும் ஆர்தி ம்ன் என்ற இரு பெயர்களை தனது தொழில்முறை பெயர்களாகப் பயன்படுத்துகிறார்.[1][3][4]
சொந்த வாழ்க்கை
தொகுமன் தனது மகள் நிகிதா மற்றும் அவரது கணவர் பர்வீஷ் மன்கட் ஆகியோருடன் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கிறார்.[1][3][4]
குறிப்புகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 Owen, Rob (May 11, 2011). "Former Pittsburgher's role in 'The Big Bang Theory' comes to a head in finale -- post-gazette.com". Pittsburgh Post-Gazette. http://www.post-gazette.com/pg/11131/1145534-67.stm. பார்த்த நாள்: September 22, 2011.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Biography of Aarti". BeerTripper. 2012. பார்க்கப்பட்ட நாள் February 13, 2013.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Cohn, Paulette (13 May 2013). "What Ethnicity is Aarti Mann?". American Profile. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.