ஆர்.என்.ஏ கூழ்ம மின்புல புரைநகர்ச்சி

ஆர்.என்.ஏ. கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி‎ (RNA gel electrophoresis) என்னும் நுட்பம் டி.என்.ஏ. கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி‎ போன்று ஆர்.என்.ஏக்களை கண்ணால் பார்க்கும் நுட்பமாகும். டி.என்.ஏ கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி‎ காணும் அனைத்து விடயங்களும் இம்முறையிலும் அடங்கும். மேலும் டி.என்.ஏ. கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி‎ முறையில் ஆர்.என்.ஏ க்களை காண முடியும் என்றாலும், அந் நுட்பம் ஆர்.என்.ஏ.க்களின் அளவுகளை (size) பார்ப்பதில் பின்னடைவை கொண்டுள்ளது. ஏனெனில் ஆர்.என்.ஏ க்கள் ஊசி-வளைவுகளை (stem-loop) தனது அமைப்பில் கொண்டுள்ளதால், ஆர்.என்.ஏ.க்கள் நகரும் விதத்தை பாதிக்கும். இதனால் நாம் காணும் அளவுகளை சரியாக கணிக்க முடியாது.

எப்படி அளவுகளை கணிப்பது? தொகு

அகரோசு கூழ்மத்தில் பார்மலின் (formalin) அல்லது பார்மல்டிகைடு (formaldehyde) கூடுதலாக இடும்பொழுது, அவைகள் ஆர்.என்.ஏ க்களின் ஊசி-வளைவுகளை இடர்வு ஏற்படுத்தும். இதனால் ஆர்.என்.ஏ க்கள் நகர்த்தல்கள் ஒழுங்கமைக்கப்படும்.

இம்முறையில் பயன்படுத்தப்படும் இடைமத்தில் (buffer) பார்மால்டிகைடு கூடுதலாக இடப்படும். மேலும் MOPS, சோடியம் அசிட்டேட் (CH3-COO-Na), இ.டி.தி.எ (EDTA) போன்ற வேதி பொருள்கள் பயன்படுத்தப்படும்.