ஆர். கிருஷ்ணன்

ஆர் கிருஷ்ணன் என்பவர் ஒரு தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 மற்றும் 1980 தேர்தல்களில் வாசுதேவநல்லூர் தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

1984 மற்றும் 1989 தேர்தல்களில் தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை போட்டியிட்டார், ஆனால் இருமுறையும் எம். அருணாச்சலத்திடம் தோல்வியுற்றார்.[3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கிருஷ்ணன்&oldid=2922316" இருந்து மீள்விக்கப்பட்டது