ஆர். சண்முகம் (மலேசிய எழுத்தாளர்)

ஆர். சண்முகம் (பிறப்பு: சூலை 6 1935) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 300-க்கு மேற்பட்ட சிறுகதைகள், 7- தொடர் கதைகள், மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

இதழியல்துறை தொகு

இவர் "மயில்", "சாந்தி", "தினமுரசு" முதலிய இதழ்களில் கடமையாற்றியுள்ளார்.

நூல்கள் தொகு

  • "விழிப்பு" சிறுகதைத் தொகுப்பு;
  • "சயாம் மரண ரயில்" (நாவல் 1993);
  • "ஆர். சண்முகம் சிறுகதைகள்" (2001).
  • "மகனைக் காக்க வாழ்வைத் தொலைத்தவள்" (நாவல், 2006)

உசாத்துணை தொகு

பரிசுகளும் விருதுகளும் தொகு

  • "சிறுகதைச் செல்வர்" (1972) - பேரா தமிழ் எழுத்தாளர் சங்கம்
  • "கதை மாமணி" (1993) - செலாங்கூர்- கூட்டரசு வளாக எழுத்தாளர் சங்கம்
  • "நட்சத்திர எழுத்தாளர்" - தமிழக இதழான "சங்கொலி" வழங்கியது
  • "லண்டன் முரசு" நடத்திய உலகச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
  • மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை சிறுகதைப் போட்டிகளில் பலமுறை முதல் பரிசுகள்
  • பல போட்டிகளில் தங்கப் பதக்கங்கள்.
  • டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் - "ஆர். சண்முகம் சிறுகதைகள்" தொகுதிக்காக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வழங்கப்பட்ட பரிசு (2002)