ஆர். தமிழ்ச்செல்வன் (மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்)

இந்திய அரசியல்வாதி

இரா. தமிழ்ச்செல்வன், 2014இல் சியோன் கோலிவாடா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று, மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளவர்[1] .

இரா. தமிழ்ச்செல்வன்
Captain R. Tamil Selvan
சட்டமன்ற உறுப்பினர்-மகாராஷ்டிர சட்டமன்றம்
முன்னையவர்ஜகனாத் செட்டி
தொகுதிசியான் கோலிவாடா
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
பதவியில்
2014–2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 திசம்பர் 1958
பிலாவிடுதி, கறம்பக்குடி, புதுக்கோட்டை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்mahabjp.org

வாழ்க்கைக் குறிப்பு தொகு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு அருகே உள்ள பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ராமையா, தங்கம் தம்பதியருக்கு பிறந்த 6 மகன்களின் மூத்தவர். கடந்த 35 ஆண்டுகளாக மகாராட்டிராவின் தலைநகரமான மும்பையில் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார். 2011 முதல் பாஜகவின் நகரப் பொதுச்செயலராகப் பதவி வகித்து வந்தார் . ரயில்வே சரக்கு கையாளும் ஒப்பந்ததாரராகத் தொழில் செய்து வரும் இவருக்கு கமலா என்ற மனைவியும், மகாலெட்சுமி, வைஷாலி ஆகிய மகள்களும் உள்ளனர்.[2][3]

26/11 மும்பை தாக்குதலின் போது கசாப்பும் அவனது கூட்டாளியும் சுட ஆரம்பித்தபோது தமிழ்ச்செல்வன் சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையத்தில் சுமார் 36 உயிர்களைக் காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்ச்செல்வனுக்கு வாக்களித்த மராட்டிய மக்கள்! 25 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ ஆனார் ஒரு தமிழர்!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2015.
  2. "புதுக்கோட்டை மாவட்டப் பூர்வீகமாகக்கொண்டவர் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ- ஆனார்". பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2014.
  3. "பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழர் வெற்றி: குடிசைப் பகுதிகளை முன்னேற்ற உறுதி". பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2014.
  4. "Pudukai Ryots' Son Tamil is Now Maharashtra's Selvan".

வெளி இணைப்புகள் தொகு