ஆறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

திருத்தந்தை

திருத்தந்தை ஆறாம் பெனடிக்ட் (இறப்பு: ஜூன் 974) ஜனவரி 19, 973 முதல் ஜூன் 974 வரை திருத்தந்தையாக இருந்தவர்.

ஆறாம் பெனடிக்ட்
ஆட்சி துவக்கம்ஜனவரி 19, 973
ஆட்சி முடிவுஜூன் 974
முன்னிருந்தவர்பதின்மூன்றாம் யோவான்
பின்வந்தவர்ஏழாம் பெனடிக்ட்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
உரோமை நகரம்
இறப்புஜூன் 974
உரோமை நகரம், புனித உரோமைப் பேரரசு
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

உரோமையில் பிறந்த இவர், ஹில்டிபிராண்டின் மகனாவார். இவர் பேரரசன் முதலாம் ஒட்டோவின் (Otto I) துணையால் திருத்தந்தையாக ஜனவரி 19, 973-இல் தேர்வானார். இவர் தனது ஆட்சியில், பல துறவற மடங்களுக்கு இருத்த உரிமைகளை நிலைநாட்டினார். பேரரசன் முதலாம் ஒட்டோவின் மரணத்திற்கு பின், உரோமை நகர மக்கள் இவரை கைதுசெய்து புனித ஆஞ்சலோ கோட்டையில் (Castel Sant'Angelo) அடைத்தனர். இரண்டு மாதத்திற்குள்ளாக முதலாம் கிறசென்டுஸின் (Crescentius I) ஆணைப்படி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
பதின்மூன்றாம் யோவான்
திருத்தந்தை
973–974
பின்னர்
ஏழாம் பெனடிக்ட்