ஆறாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை
திருத்தந்தை ஆறாம் போனிஃபாஸ், ரோம் நாட்டினர் ஆவார். சுமார் ஏப்ரல் 896-ஆம் ஆண்டு, திருத்தந்தை ஃபொர்மோசுஸின் மரணத்திற்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருமுறை குருவாகவும், துணை திருத்தொண்டராகவும் இருந்தபோது தன் பதவியை இழக்க நேர்ந்தது.
ஆறாம் போனிஃபாஸ் | |
---|---|
ஆட்சி துவக்கம் | ஏப்ரல் 896 |
ஆட்சி முடிவு | ஏப்ரல் 896 |
முன்னிருந்தவர் | ஃபொர்மோசுஸ் |
பின்வந்தவர் | ஆறாம் ஸ்தேவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? ரோம், இத்தாலி |
இறப்பு | ஏப்ரல் 896 ??? |
போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
வெறும் 15 நாள் ஆட்சிக்குப்பின் கீல்வாதத்தால் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் வேறு சிலர் ஸ்பொலித்தோக்களின் (Spoleto) கட்டாயத்தினால், ஆறாம் ஸ்தேவானை திருத்தந்தையாக்க பதவி விலகினார் எனகின்றனர்.
898-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் யோவானால் கூட்டப்பெற்ற சங்கத்தில் இவரது திருப்பீடத் தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- "ஆறாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.