ஆற்றல் மட்டம்

ஓர் அணுவை எடுத்துக் கொண்டால், அணுக்கருவைச் சுற்றி இலத்திரன்கள் சுற்றி வருகின்றன. ஆனாலும், இலத்திரன்கள் தாம் சுற்றி வரும் ஒழுக்கைத் தாமே தேர்ந்தெடுக்க முடியாது. இவை ஒரு குறிப்பிட்ட ஆற்றலைக் கொண்ட ஒழுக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஒழுக்கும் வெவ்வேறு ஆற்றல் மட்டங்களை (energy levels) ஐக் கொண்டிருக்கும். இலத்திரன்கள் பல கூண்டுகளில் (Shells) அல்லது பல நிலைத்த ஆற்றல் மட்டங்களில் அணுக்கருவைச் சுற்றி சுற்றி வருகின்றன.

இலத்திரன் மட்டத் தாவல்கள் தொகு

 
ஆற்றல் மட்டம் E1 இலிருந்து E2 இற்கு அதிகரிக்கும் போது ஒளியணு உறிஞ்சப்படுகிறது, இதன் ஆற்றல் = h ν
 
ஆற்றல் மட்டம் E2 இலிருந்து E1 இற்குக் குறையும் போது ஒளியணு வெளிவிடப்படுகிறது. இதன் ஆற்றல் = h ν

ஒரு மட்டத்திலிருந்து பிறிதொரு மட்டத்திற்கு இலத்திரன் தாவும் போது ஆற்றலை உமிழவோ அல்லது ஆற்றலை ஏற்கவோ செய்கின்றன. இந்த ஆற்றலின் அளவு hν = E1~ E2 என்று கொடுக்கப்படும். இவ்வாற்றல் ஒரு மின்காந்த ஒளியணுவாக (photon) வெளிப்படும். இதன் அதிர்வெண்

ν = E1~E2/h

என்று கொடுக்கப்படும். இங்கு h என்பது பிளாங்கின் மாறிலி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றல்_மட்டம்&oldid=2745978" இலிருந்து மீள்விக்கப்பட்டது