ஆற்று ஓங்கல்கள்

ஆற்று ஓங்கல்கள் (Cut bank அல்லது River Cliffs) என்று அழைக்கப்படுவது ஆறோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும். செங்குத்து சரிவு மற்றும் ஆற்றின் அதிக வேகம் காரணமாக செங்குத்து அரித்துத் தின்னல் செயல் இங்கு முதன்மையாக இருக்கிறது.[1]

மொன்ட்டானாவில் மொன்டானாவில் பவுடர் ஆற்றில் காணப்படும் ஆற்று ஓங்கல்கள்
கட் பேங்க் க்ரீக் வழியாக ஆற்று ஓங்கல்கள்

ஆற்று வளைவில் ஆற்றுநீர் செல்லும்போது அது வளைவின் மேல் நேரடியாக மோதி அரித்து வன்சரிவுடைய ஆற்று ஓங்கலை ஏற்படுத்துகிறது. ஆறுகள் ஓடும் போக்கில் மியான்டர்களின் வளைவானது வெளிபுறமாக வளர்ச்சி அடைகின்றது. மியான்டர்களின் போக்கில் காணப்படும் கிளைக் குன்றுகளின் பக்கவாட்டு அரிப்பே இதற்கு காரணமாகும். [2]

மேற்கோள்கள் தொகு

  1. Essentials of Geology, 3rd Ed, Stephen Marshak
  2. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 262.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்று_ஓங்கல்கள்&oldid=3312539" இலிருந்து மீள்விக்கப்பட்டது