ஆலங்குடி நாடியம்மன் கோவில்

ஆலங்குடி நாடியம்மன் கோவில் (Nadiyamman Temple, Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

உலக நன்மைக்காகவும் நோய் நொடி இன்றி மக்கள் வாழவும், நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி இங்கு சித்திரை மாதத்தில் திருவிளக்கு பூசை நடைபெரும். சிறப்பு அபிசேக பூசைகள் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் இத்திருவிளக்கு பூசையில் பங்கேற்பர்.[1] இக்கோயிலில் பாளையெடுப்புத் திருவிழா என்ற மற்றொரு முக்கியமான திருவிழாவும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தென்னம்பாளைகளை குடங்களில் ஏந்தியபடி வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வந்து சுவாமியை வழிபடுவர்.[2] ஆலங்குடியில் உள்ள நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மதுஎடுப்பு திருவிழா நடைபெறும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "ஆலங்குடி நாடியம்மன் கோவில் சித்திரை திருவிளக்கு பூஜை.. 501 பெண்கள் பங்கேற்பு!". News18 Tamil. 2023-04-17. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  2. "ஆலங்குடி நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2022/aug/03/alangudi-nadiyamman-temple-palayyedup-festival-3892121.html. பார்த்த நாள்: 20 May 2023. 
  3. மலர், மாலை (2022-08-04). "நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.