ஆல்கா யாக்னிக்
அல்கா யாக்னிக் (Alka Yagnik, பிறப்பு 20 மார்ச் 1966) என்பவர் ஒரு இந்திய பின்னணிப் பாடகியாவார். இவர் முதன்மையாக இந்தித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 1990களின் பாலிவுட்டின் மிக முக்கியமான பாடகிகளில் ஒருவராக இருந்த இவர், இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், இரண்டு வங்காள திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருதுகள், சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் [note 1] உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் விருதுகளுக்கான முப்பத்தேழு பரிந்துரைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆல்கா யாக்னிக் | |
---|---|
![]() 2023 இல் ஆல்கா யாக்னிக் | |
பிறப்பு | 20 மார்ச்சு 1966 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
பணி | பின்னணிப் பாடகர் |
வாழ்க்கைத் துணை | நீரஜ் கபூர் (தி. 1989) |
பிள்ளைகள் | 1 |
இசை வாழ்க்கை | |
இசைக்கருவி(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1980–தற்போது |
யாக்னிக் மிகத் திறமையான பின்னணி பாடகிகளிலும், கலைஞர்களிலும் ஒருவராவர். இவரது பாலிவுட் தொழில் வாழ்க்கையில் ஏராளமான பெண் தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். [1] நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது வாழ்க்கையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பதிவு செய்துள்ளார். [2] [3] பிபிசியின் எல்லா காலத்திலும் சிறந்த நாற்பது பாலிவுட் பாடல்களின் பட்டியலில் இவரது இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. [4] 2025 மார்ச் நிலவரப்படி, யூடியூப்பின் சிறந்த உலகளாவிய கலைஞர்களின் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார். வாரத்திற்கு சுமார் 360-400 மில்லியன் பார்வைகள், வருடத்திற்கு சுமார் 18 பில்லியன் பார்வைகளுடன், இவர் பல ஆண்டுகளாக தரவரிசையில் முன்னணியில் இருந்து வருகிறார். இது எல்லா காலத்திலும் ஒப்பிட முடியாத சாதனையாகும். [5]
2022 ஆம் ஆண்டில் 15.3 பில்லியன் யூடியூப் பார்வைகளுடன் கின்னஸ் உலக சாதனையாக யாக்னிக் உலகில் அதிகம் பார்க்கப்பட்ட கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இதில் சுமார் 12.3 பில்லியன் அல்லது 80% பேர் இந்தியாவைச் சேர்ந்த பயனர்கள், இவர் பாகதித்தானில் 683 மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிகம் கேட்கப்பட்ட கலைஞர் ஆவார். "கொல்கத்தாவில் பிறந்த 56 வயதான யாக்னிக், கடந்த மூன்று ஆண்டுகளாக மேடைகளில் மிகவும் பிரபலமான கலைஞராக இருந்து வருகிறார். 2021 இல் 17 பில்லியன் பார்வைகளையும் 2020 இல் 16.6 பில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளார்" என்று சாதனைப் புத்தகம் மேலும் தெரிவித்துள்ளது [6]
துவக்க கால வாழ்க்கை
தொகுயாக்னிக் 1966 மார்ச் 20 அன்று கல்கத்தாவில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் தர்மேந்திர சங்கர். [7] [8] தாயாரான சுபா இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகியாவார். 1972 ஆம் ஆண்டு ஆறு வயதில், கல்கத்தாவின் ஆகாஷ்வாணி ( அனைத்திந்திய வானொலி ) நிகழ்ச்சிக்காகப் பாடத் தொடங்கினார். 10 வயதில், இவரது தாயார் இவரை மும்பைக்கு குழந்தைப் பாடகியாக அழைத்து வந்தார். இவரது குரல் முதிர்ச்சியடையும் வரை காத்திருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது, ஆனால் இவருடைய தாயார் தன் மகளை பாடகியாக்குவதில் உறுதியாக இருந்தார். அடுத்த முறை யாக்னிக் தனது கொல்கத்தா விநியோகத்தரிடமிருந்து ராஜ் கபூருக்கு ஒரு அறிமுகக் கடிதத்தைப் பெற்றுவந்தார். பெண்ணின் குரலைக் கேட்ட கபூர், பிரபல இசையமைப்பாளர் லட்சுமிகாந்த் சாந்தாராம் குடால்கருக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பினார். இவரின் குரலால் ஈர்க்கப்பட்ட லட்சுமிகாந்த், இவருடைய தாயாருக்கு இரண்டு வழிகளைக் காட்டினார் - உடனடியாக பின்னணி குரல் கலைஞராகப் பணியைத் தொடங்குவது அல்லது சிலகாலம் கழித்து பாடகியாகுவது; சுபா தனது மகளுக்கு இரண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தார். [9] யாக்னிக் தான் ஒரு புத்திசாலி மாணவி என்றும், ஆனால் படிப்பில் விருப்பமில்லை என்றும் குறிப்பிட்டார். [7]
தொழில்
தொகுபாரம்பரிய பாணியில் இசைப் பயிற்சி பெற்ற யாக்னிக், தனது ஆறு வயதில் கல்கத்தாவின் ஆகாஷ்வாணிக்காக (அகில இந்திய வானொலி) பஜனைகளைப் பாடத் தொடங்கினார் . இவர் முதன்முதலில் பாயல் கி ஜான்கார் (1980) படத்திற்காக பின்னணி பாடல் பாடினார். இதைத் தொடர்ந்து "மேரே அங்கனே மெய்ன்" என்ற பாடலை லாவாரிஸ் (1981) படத்தில் பாடினார். அதைத் தொடர்ந்து ஹமாரி பஹு அல்கா (1982) திரைப்படம் வெளியானது. தேசாப் (1988) திரைப்படத்தின் "ஏக் தோ தீன்" பாடலின் மூலம் இவருக்கு பெரிய அளவில் புகழ் கிடைத்தது. " ஏக் தோ தீன் " பாடல் பதிவு நாளில் தனக்கு மிகுந்த காய்ச்சல் இருந்ததாக கூறினார். இந்தப் பாடல் இவர் இதுவரைப் பெற்ற சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகளில் முதல் விருதாகும். [10] இவர் இந்தி தவிர, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒடியா, பஞ்சாபி, போச்புரி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இது மட்டுமல்லாமல் 15 பாக்கித்தானிய பாடல்களையும் பாடியுள்ளார். இவர் உலகம் முழுவதும் நேரடி இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். மிட் டே இதழுக்கு இவர் அளித்த ஒரு நேர்காணலில், யாக்னிக் தான் ஒரு காலத்தில் தினமும் ஐந்து பாடலை ஒலிப்பதி செய்ததாகக் கூறினார். [11]
1993 இல், யாக்னிக் இலா அருணுடன் " சோலி கே பீச்சே கியா ஹை " என்ற கவர்ச்சியான பாடலைப் பாடினார். ஆனந்த் பக்சி எழுதிய இந்தப் பாடல் வரிகள் சர்ச்சையை உருவாக்கின. இந்தப் பாடலுக்காக இவருக்கு இரண்டாவது பிலிம்பேர் விருது கிடைத்தது, அதை அவர் இலா அருணுடன் பகிர்ந்து கொண்டார். [12]
1990கள் முழுவதும் யாக்னிக் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளுக்கான பெரும்பாலான பாடல்களைப் பாடினர். [13]
2012 ஆம் ஆண்டு, இவர் சோனு நிகாமுடன் இணைந்து இந்திய தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் பரப்புரைக்காக 'சிக்ஷா கா சூரஜ்' என்ற பாடலைப் பாடினார். இதற்காக இவரை ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் பாராட்டினார். [14] 2012 ஆம் ஆண்டில், இந்தி திரைப்படத் துறையின் 100 ஆண்டு விழாவையொட்டி, தேசிமார்டினி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஃபீவர் 104 நடத்திய வாக்கெடுப்பில், தால் திரைப்படத்தில் இவர் பாடிய "தால் சே தால் மிலா" பாடலானது நூற்றாண்டின் சிறந்த பாடலாக தேர்ந்தெடுக்கபட்டது. [15] மேலும், சனோனா நடத்திய கருத்துக் கணிப்பில், கல்நாயக் திரைப்படத்தில் இடம்பெற்ற அவரது "சோளி கே பீச்சே" பாடல் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான பாடலாக வாக்களைப் பெற்றது. [16]
2015 ஆம் ஆண்டில், இவர் 'அகர் தும் சாத் ஹோ' பாடலைப் பாடினார்; அந்தப் பாடலின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அப்போது ஒலிப்பதிவுக் கூடத்தில் இருக்கவில்லை என்றும், இசுகைப் காணொளி அழைப்பின் வழியாக தனக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும், பாடலை தனது சொந்த நடையில் பாட வேண்டும் என்றும் அவர் விளக்கியதாக கூறினார். [17]
அதிக எண்ணிக்கையிலான பிலிம்பேர் விருதுகளைப் பெற்ற பெண் பின்னணிப் பாடகி என்ற பெருமையை ஆஷா போஸ்லேவைப்போல (ஏழு) யாக்னிக்கும் பெறுகிறார். [18] இவர் 1,114 படங்களில் 2,486 இந்தி பாடல்களைப் பாடியுள்ளார். ஆஷா போஸ்லே (7886 பாடல்கள்), முகமது ரபி (7405 பாடல்கள்), [19] லதா மங்கேஷ்கர் (5596 பாடல்கள்), கிஷோர் குமார் (2,707 பாடல்கள்) ஆகியோருக்கு அடுத்து, எல்லா காலத்திற்குமான மிகத் திறமையான பாலிவுட் பாடகிகள் என்ற பட்டியலில் யானிக் ஐந்தாவது இடத்தில் உள்ளார். [ சான்று தேவை ] தனது பாலிவுட் வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையிலான பெண் பின்னணிப் பாடல்களைப் பாடிய லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது சிறந்த பெண் பின்னணிப் பாடகி இவராவார். [1]
கலைத்திறன்
தொகுநான்கு வயதிலிருந்தே பாடத் தொடங்கிய இவர் தன் தாயாரையே தன் முதல் குருவாக குறிப்பிடுகிறார். [10] யானிக் தன் தாயைத் தவிர, அல்கா கல்யாண்ஜி-ஆனந்த்ஜி, லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் ஆகியோரிடம் பாடக் கற்றுக்கொண்டார். [20] இவர் பல வகைப் பாடல்களைப் பாடியிருந்தாலும், அல்காவின் கூற்றுப்படி, இவரது குரல் காதல் பாடல் வகைக்கு மிகவும் பொருத்தமானதாகும். [21] மூத்த பாடகி லதா மங்கேஷ்கரை தனக்கான ஒரு உத்வேகமாகமாக அல்கா ஒப்புக்கொண்டுள்ளார். [21] இவர் காதல், சோகம், துல்லிசை, கவர்ச்சி, குத்தாட்டப் பாடல்களைப் பாடியுள்ளார். [22] [23] இவர் தனது 4 வயதிலேயே பாடத் தொடங்கினார், இவரது பெரும்பாலான ஜோடிப் பாடல்கள் குமார் சானுவுடன் இணைந்து பாடப்பட்டன, அதைத் தொடர்ந்து உதித் நாராயண் மற்றும் சோனு நிகம் ஆகியோருடன் பாடியுள்ளார். [24] இவர் குமார் சானுவுடன் அதிகபட்ச காதல் பாடல்களையும், உதித் நாராயணனுடன் அற்புதமானப் பாடல்களையும் பாடியுள்ளார். [24] மேலும் இவர் 1990களின் பின்னணிப் பாடலின் மும்மூர்த்திகளாக குமார் சானு, உதித் நாராயண் ஆகியோருடன் சேர்த்து அறியப்படுகிறார். [25]
ஊடகங்களில்
தொகுயாக்னிக் "பின்னணிப் பாடலின் அரசி" என்று குறிப்பிடப்படுகிறார். 12, 12, 2019 அன்று அன்னையர் நாளன்று, சுபாட்டிபையில் அதிகம் கேட்கபட்ட இந்திய கலைஞர்-இவராவார். டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரை 'தேன் குரல் பாடகி' என்று குறிப்பிட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் இவரது குரலை "மந்திரக் குரல்" என்று குறிப்பிட்டது. மிட் டே இவரை 1990களின் குறிப்பிடத்தக்க பின்னணிப் பாடகர்கள் பட்டியலில் சேர்த்தது. [26] மிகப் பிரபலமான, முன்னணி சமகால பாடகிகளில் ஒருவரான சுனிதி சௌஹான் ஒருமுறை, லதாஜி, ஆஷாஜி, அல்காஜி (அல்கா யாக்னிக்) அடைந்த இடத்தை அடைவதைக் கனவில் கூட நினைக்க முடியாது என்று கூறினார். மங்கேஷ்கர் சகோதரிகளுக்கு (லதா-ஆஷா இரட்டையர்) பிறகு சிறந்த பெண் பாடகி அல்கா யாக்னிக் தான் என்று மூத்த இசையமைப்பாளர் லலித் பண்டிட் குறிப்பிட்டார். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் 1990களில் அல்கா யாக்னிக்கை தன் விருப்பமான பாடகியாகத் தேர்ந்தெடுத்து, யாக்னிக்கின் அழகான குரலைப் பாராட்டினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுயாக்னிக் 1989 ஆம் ஆண்டு சில்லாங்கைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் கபூரை மணந்தார், இவருக்கு சயீஷா என்ற மகள் உள்ளார். [27]
2024 ஆம் ஆண்டு இவர் கேட்கும் திறனை இழந்தார். [28]
விருதுகளும் பரிந்துரைகளும்
தொகுயாக்னிக் தான் பாடிய பாடல்களுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை ஹம் ஹைன் ரஹி பியார் கே (1993) [29] படத்தில் இடம்பெற்ற "கூங்கட் கி ஆட் சே" மற்றும் "குச் குச் ஹோதா படத்தில் இடம்பெற்ற குச் குச் ஹோதா ஹை" ஆகிய பாடங்களுக்காக பெற்றுள்ளார். [30] இவர் பாடிய பாடல்களுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான சாதனை ஏழு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார் [note 2] மேலும் வங்காள திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருதுகளை இருமுறை பெற்றுள்ளார். இசைத்துறையில் யாக்னிக் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2019 ஆம் ஆண்டில் லதா மங்கேஷ்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [31] மேலும் இவர் விருதுகளுக்கான முப்பத்தேழு பரிந்துரைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ Tied with ஆஷா போஸ்லே.
- ↑ Tied with ஆஷா போஸ்லே.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Women are fading out from Bollywood music". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 13 May 2019.
- ↑ "Iconic Alka Yagnik". IBN Live இம் மூலத்தில் இருந்து 7 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141007114441/http://ibnlive.in.com/news/playlist-the-best-of-birthday-girl-alka-yagnik/240724-8-66.html.
- ↑ "Happy Birthday Alka Yagnik: Evergreen songs by the melody queen that will make you nostalgic". 20 March 2019. Archived from the original on 13 May 2019.
- ↑ "BBC Top 40 tracks of all time". BBC Asia. 2008. Archived from the original on 15 April 2009. Retrieved 3 May 2009.
- ↑ "YouTube Music Charts" (in ஆங்கிலம்). Retrieved 17 March 2020 – via YouTube.
- ↑ "Guinness World Records" (in ஆங்கிலம்). 20 January 2023. Retrieved 21 January 2023 – via YouTube.
- ↑ 7.0 7.1 "A Lots of Songs Were Taken From Me". பிலிம்பேர். Archived from the original on 13 May 2019.
- ↑ "Alka_Yagnik". Alkayagnik.co.in. Archived from the original on 5 September 2012. Retrieved 24 December 2015.
- ↑ "About Me". Alka Yagnik. 2008. Archived from the original on 5 September 2012. Retrieved 3 May 2008.
- ↑ 10.0 10.1 "Would listen to my songs, analyse, learn from mistakes: Alka Yagnik". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 21 April 2017.
- ↑ "Alka Yagnik: Sang Ek Do Teen in one go". மிட் டே. 9 July 2018.
- ↑ "Musical notes with Alka Yagnik". பாலிவுட் கங்காமா. 25 October 2016. Archived from the original on 12 March 2017. Retrieved 12 March 2017.
- ↑ Raman, Sruthi Ganapathy (9 December 2017). "Sunidhi Chauhan interview: 'Any song can sound good if you do a good job'". Scroll.in. https://scroll.in/reel/860190/sunidhi-chauhan-interview-any-song-can-sound-good-if-you-do-a-good-job.
- ↑ "Shiksha Ka Suraj". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012. Archived from the original on 6 September 2012. Retrieved 20 March 2012.
- ↑ "Song of The Century". 2012. Retrieved 31 August 2012.
- ↑ "Hottest Song of The Century". 2013. Retrieved 26 April 2013.
- ↑ "World Music Day: 'Time just flew by', says Alka Yagnik on spending close to four decades in Bollywood". indulgexpress.com. 20 June 2019. Archived from the original on 25 August 2019.
- ↑ "Filmfare Award Archive" (PDF). 2005. Retrieved 20 March 2005.
- ↑ "Facts you should know about Mohammed Raf". http://english.manoramaonline.com/entertainment/music/mohammed-rafi-death-anniversary-special-things-you-should-know.html.
- ↑ "Alka Yagnik prefers live performances over playback singing". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 September 2016. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/Alka-Yagnik-prefers-live-performances-over-playback-singing/articleshow/53994822.cms?from=mdr.
- ↑ 21.0 21.1 "A lot of songs were taken away from me". Filmfare official website.
- ↑ "15 Most Perverted Double Meaning Songs in Bollywood". MensXP.com. 30 May 2015. Archived from the original on 28 July 2019.
- ↑ "Digitisation can enhance your singing, not your skill: Alka Yagnik". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 4 January 2015.
- ↑ 24.0 24.1 "Alka Yagnik: I'd die if a song I recorded is given to someone else". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 January 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Alka-Yagnik-Id-die-if-a-song-I-recorded-is-given-to-someone-else/articleshow/50579022.cms?from=mdr.
- ↑ "38th Anniversary: When music was the hero". மிட் டே. 23 June 2017.
- ↑ "Bollywood playback singers who are tuned out!". மிட் டே. 5 March 2014. Retrieved 24 June 2017.
- ↑ "Alka Yagnik Birthday Special: From 'Tip Tip Barsa' to 'Lal Dupatta,' Top 10 songs by the soulful singer" (in en). Free Press Journal. 19 March 2021. https://www.freepressjournal.in/entertainment/bollywood/alka-yagnik-birthday-special-from-tip-tip-barsa-to-lal-dupatta-top-10-songs-by-the-soulful-singer.
- ↑ Mishra, Lata (19 June 2024). "Alka Yagnik's 'hearing loss' a disorder hard to reverse: Doctors". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/alka-yagniks-hearing-loss-a-disorder-hard-to-reverse-doctors/articleshow/111094199.cms.
- ↑ "41st National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 16 January 2020. Retrieved 24 February 2022.
- ↑ "46th National Film Awards (PIB - Feature films)". Press Information Bureau (PIB), India. Archived from the original on 19 August 2012. Retrieved 24 February 2022.
- ↑ "Alka Yagnik and Udit Narayan to get Lata Mangeshkar Award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/alka-yagnik-and-udit-narayan-to-get-lata-mangeshkar-award/articleshow/61162779.cms.