ஆல்பேர்ட்டோசோரஸ்

ஆல்பேர்ட்டோசோரஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
ஆல்பேர்ட்டோசோரஸ் எலும்புக்கூடு அல்பேர்ட்டாவில் உள்ள ரோயல் டைரெல் அருங்காட்சியகத்தில் உள்ளது.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரொப்சிடா
பெருவரிசை: டயனோசோர்
வரிசை: சோரிஸ்ச்சியா
துணைவரிசை: தேரோப்போடா
குடும்பம்: தைரனோசோரிடீ
பேரினம்: ஆல்பேர்ட்டோசோரஸ்
ஓஸ்போர்ன், 1905
இனங்கள்
  • A. sarcophagus (வகை)
    ஓஸ்போர்ன், 1905
வேறு பெயர்கள்

ஆல்பேர்ட்டோசோரஸ் (உச்சரிப்பு /ælˌbɝtoʊˈsɔrəs/; meaning "ஆல்பேர்ட்டா பல்லி") என்பது தைரனோசோரிட் தேரோபோட் தொன்மா பேரினத்தைக் குறிக்கும். இவை இன்றைய மேற்கு வட அமெரிக்காவில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிந்திய கிரேத்தாசியக் காலத்தில் வாழ்ந்தன. இதன் இனவகையான ஆ. சார்க்கோ ஃபேகஸ் இன்றைய கனடாவின் மாகாணமான ஆல்பேர்ட்டாவுக்குள் அடங்கியுள்ளது. இதனாலேயே இம் மாகாணத்தின் பெயர் இப் பேரினத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பேரினத்துக்குள் அடங்கும் இனங்கள் குறித்து அறிவியலாளரிடையே கருத்து வேற்றுமை காணப்படுகின்றது.

ஒரு தைரனோசோரிட் என்றவகையில் ஆல்பேர்ட்டோசோரஸ் ஒரு இருகாலி, இரைகொல்லி ஆகும். இதற்கு மிகச் சிறிய இரு விரல்கள் கொண்ட முன்னங்கைகளும், பெரிய தலையும், பல கூரிய பற்களும் அமைந்துள்ளன. இது இதன் சூழலின் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பேர்ட்டோசோரஸ்&oldid=1828164" இலிருந்து மீள்விக்கப்பட்டது