ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்

ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட் (Allvar Gullstrand, சூன் 5, 1862 - சூலை 28, 1930) ஒரு சுவீடிய விழியியலாளர் (கண் மருத்துவர்) ஆவார்[1]. இவர் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து (1894-1927) கண் மருத்துவம், மற்றும் ஒளியியல் துறைகளில் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1911 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. இவர், கண்களில் ஏற்படும் ஒளி சிதைவினையும், ஒளியியல் உருமத்தினையும் கண்டறிய இயல்கணித முறைகளைப்பயன்படுத்தினார். உருப்பிறழ்ச்சி (astigmatism), விழி அகநோக்கியினை மேம்படுத்துதல் மற்றும் கண்புரை நீக்கியபின் திருத்துவில்லைகளை உபயோகித்தல் ஆகியவற்றில் நடத்திய ஆய்விற்காக பாராட்டப்படுகிறார்.

ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்
பிறப்புசூன் 5, 1862 (1862-06-05) (அகவை 161)
சுவீடன்
இறப்புசூலை 28, 1930(1930-07-28) (அகவை 68)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
குடியுரிமைசுவீடிஷ்
தேசியம்சுவீடிஷ்
துறைவிழியியல்
பணியிடங்கள்உப்சாலா பல்கலைக்கழகம்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1911)

மேற்கோள்கள் தொகு

  1. ""Allvar Gullstrand - Biographical".". Nobelprize.org. Nobel Media AB - 2014. Web. 19 Jul 2015. http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1911/gullstrand-bio.html. பார்த்த நாள்: 19 சூலை 2015. 
  2. ""Allvar Gullstrand - Facts".". Nobelprize.org. Nobel Media AB - 2014. Web. 19 Jul 2015.. http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1911/gullstrand-facts.html. பார்த்த நாள்: 19 சூலை 2015.