ஆள் பாஃர் லவ் (நாடகம்)

1677-ஆம் ஆண்டு ஆங்கில எழுத்தாளா் ஜாண் டிரைடன் எழுதிய நாடகம் ஆள் பாஃர் லவ் ஆகும். இந்த நாடகத் தொகுப்பு சேக்ஷபியாரின் ஆண்டனி அண்ட் கிளியோபட்ரா என்னும் நாடகத்தின் கருவாகும். ஒரு மனிதனின் வாழ்வில் கடைசி நிமிடங்கள் எவ்வாறாக அமையும் என்பதையே இந்த நாடகத்தின் ஆசிரியா் கவனம் செலுத்துகிறார்.

கதைச் சுருக்கம்தொகு

இந்த நாடகம் ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு ஐந்தும் வெவ்வேறு இடம், காலம் மற்றும் சூழ்நிலையில் நடைபெறுகிறது.

பாகம் 1தொகு

சிரப்பியன் என்னும் தீர்க்கதரிசி எகிப்து நாட்டிற்கு பேரழிவு வரப்போவதாக முன் குறிக்கிறார். இதைக் கேட்ட அலெக்ஸ் கிளியோபட்ரா ஆண்டனி தன்னை விட்டு பிரிந்து விடுவார் என்றும் கவலையில் இருப்பதாக கூறுகிறார். ரோம நாட்டு அரசவை உறுப்பினராக வென்றிடியஸ் ஆண்டனியை சந்திக்க எகிப்துக்க வந்திருப்பதாக தகவல் வருகிறது. அவா் அண்டனி கிளியோபட்ரா உறவை ஏற்க மறுக்கிறார்.

பாகம் 2தொகு

கிளியோபட்ரா ஆண்டனியை சந்திக்க ஏக்கத்துடன் இருக்கிறார். அவரது பணிப்பெண் சார்மியன் தன் தலைவி தலைவனை சந்திக்க வகைத் தேடுகிறார். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. கிளியோபட்ரா சிரியா மற்றும் எகிப்தை ஆண்டனிக்காக தியாகம் செய்ததை ஆண்டனி அறிந்து அவளிடம் திரும்புகதிறார்.

பாகம் 3தொகு

டோலபெல்லா, ஆண்டனியின் நண்பா் அவாிடம் எகிப்தை காப்பாற்ற அவா் ஆக்டேவியா, ஆண்டனியின் மனைவியிடம் திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இதை அவா் ஏற்கிறார்.

பாகம் 4தொகு

வென்றிடியஸ் ஆண்டனியிடம் டோலபெல்லாவுக்கும், கிளியோபட்ராவுக்கும் தொடா;பு இருப்பதாக கூறுகிறாh;. ஆனால் ஆண்டனி அதை ஏற்க மறுத்து விடவே ஆக்டேவியா ஆண்டனியை விட்டு நிரந்தரமாக பிரிய துணிகிறார்.

பாகம் 5தொகு

ஆக்டேவியஸ் சீசர் அலெக்ஸாண்டிரியாவை கைப்பற்ற வருவதை அறிந்து கொண்டார். கியோபட்ரா இறந்ததாக ஆண்டனியிடம் கிடைத்த தவறான தகவலினால் தன்னைத் தானே கொல்ல துணிந்தார். வென்றிடியஸ்ஸிடம் தன்னை வாழால் கொல்லச் சொன்னார். ஆனால் அவா் மறுத்து தன்னையே வாழால் குத்திக் கொண்டார். ஆண்டனியும் வேறு வழி இல்லாமல் வாழின் மேல் விழுந்து தன் உயிரை மாய்த்தார். கிளியோபட்ரா இதை கேள்விப்பட்டு கிளியேபட்ராவும் விஷமிக்க சா்ப்பத்தை தன்னை தானே கடிக்க வைத்து உயிரை நீத்தார். "பிக்காஸ் ஐ குட் நாட் ஸ்டாப் பாஃர் டத்" என்னும் கவிதை எமிலி டிக்கின்சனால் எழுதப்பட்டது. 1890 இல் கவிதையின் தொடர்ச்சியான பதிப்புகள் வெளியிடப்பட்டது.1955 ஆம் ஆண்டு தோமஸ் எச். ஜான்சனின் மாறுபட்ட பதிப்பின் படி இந்த கவிதையின் எண்ணிக்கை 712 ஆகும்.

சான்றுகள்தொகு

  • Dryden, John. All for Love. London:Nick Hern Books Limited, 1998.
  • John Downes, Roscius Anglicanus, London, 1708; Montague Summers, ed., London, Fortune Press [no date]; reprinted New York, Benjamin Blom, 1963; p. 11.
  • Huse, Ann A. “Cleopatra, Queen of the Seine: The Politics of Eroticism in Dryden’s “All for Love.” Huntington Library Quarterly 63 (2000): 23–46; 39
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆள்_பாஃர்_லவ்_(நாடகம்)&oldid=3376812" இருந்து மீள்விக்கப்பட்டது