ஆஸ்திரேலியன் எலுமிச்சை

ஆஸ்திரேலியன் எலுமிச்சை';ஆஸ்திரேலியன் எலுமிச்சை என்பது ஒரு சிறிய வகை மரமாகும். இதன் பழங்கள் அதிக சாறுடையனவாக உள்ளன. இது பெரும்பாலும் வட்ட வடிவில் உள்ளது. இதன் வடிவத்தாலேயே இது ஆஸ்திரேலியன் வட்டவடிவ எலுமிச்சை என்று அழைக்கப்படுகிறது. இப்பழத்தில் அதிக அளவில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இம்மரங்கள் ஆஸ்திரேலியாவின் வனபகுதிகளான குயின்ஸ்லாண்டின் வட பகுதி மற்றும் பீன்லெய்க் பகுதிகளில் காணப்படுகின்றன. இது 20மீ உயரம் வரை வளரக்ககூடியது. இம்மரத்தின் பழங்கள் கோள அல்லது சிறிதளவு பேரிக்காய் வடிவமுடியதாகவும் உள்ளன. இதன் தோல் 25மி.மீ முதல் 50மி.மீ வரை அடர்த்தியான பச்சை மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது.