ஆ. ராசா சொத்து குவிப்பு வழக்கு

ஆ. ராசா சொத்து குவிப்பு வழக்கு என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, இந்திய அரசின் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்காகும். இந்த குற்ற வழக்கினை சிபிஐ 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்தது. மேலும் இவ்வழக்கில் ராசாவின் மனைவி உட்பட 18 பேர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.[1].[2]ஏற்கனவே ஆ. ராசா மீது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.

2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) தீர்ப்பு தொகு

இந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் ஆ. ராசா, கனிமொழி, உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.[3]

2015-ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் தொகு

முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா மீது 2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ரூபாய் 5.53 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக (ஆ. ராசாவின் அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து 579 சதவீதம் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது). மத்திய புலனாய்வுத் துறை 11 அக்டோபர் 2022 அன்று ஆ. ராசா உள்ளிட்ட ஐந்து பேர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.[4][5] ஆ. ராசா 10 சனவரி 2023 அன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக 10 சனவரி 2023 அன்று நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது.[6][7]

இதனனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ஆ.ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவானது
  2. ஆ.ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு; இருபது இடங்களில் சிபிஐ சோதனை
  3. "2 ஜி தீர்ப்பு - வெடி சத்தத்தில் அதிர்ந்த அண்ணா அறிவாலயம்". விகடன் (21 திசம்பர் 2017)
  4. ஆ. இராசா உள்ளிட்ட ஐந்து பேர் மீது சி பி ஐ குற்றப் பத்திரிகை தாக்கல்
  5. CBI files charge sheet against A Raja in disproportionate assets case
  6. சொத்து குவிப்பு வழக்கு : தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு 'சம்மன்'
  7. CBI summons A Raja in disproportionate assets case

வெளி இணைப்புகள் தொகு