இசுடீவன் வைசுனெர்

இசுரேலிய இயற்பியலாளர்

இசுடீவன் யே வைசுனெர் (Stephen J. Wiesner; 1942 – ஆகத்து 12, 2021)[1]) இசுரேல் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சி இயற்பியலாளர் ஆவார். இயெரோம் வைசுனெருக்கும் இலயா வைசுனெருக்கும் மகனாக 1942 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.[2]

2015 ஆம் ஆண்டு வைக்கோல் தொப்பியுடன் இசுடீவன் வைசுனெர்

1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராக குவாண்டம் தகவல் கோட்பாட்டின் மிக முக்கியமான பல சிந்தனைகளைக் கண்டுபிடித்தார், துளிம குறிப்பு பகிர்வுக்கு வித்திட்ட துளிம பணம்,[3] தொடக்கக் கால தெளிவற்ற பரிமாற்றத்திற்கு எடுத்துக்காட்டான பல்கூட்டுச் செலுத்துகை,[4] சிக்கலாக்கத்துடன் உதவக்கூடிய தகவல்தொடர்புக்கான முதல் மற்றும் மிக அடிப்படையான எடுத்துக்காட்டான மீயடர்த்தி குறியீட்டு முறை உள்ளிட்ட சிந்தனைகள் வைசுனர் கண்டுபிடித்த சில தகவல் பரிமாற்ற நுட்பங்களாகும்.[5] இந்த கண்டுபிடிப்புகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படாவிட்டாலும், 1980 ஆம் ஆண்டுகள் மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் கையெழுத்துப் பிரதி வடிவத்தில் பரவலாகப் பரவி குவாண்டம் தகவல் அறிவியலின் தோற்றத்தைத் தூண்டியது.

அமெரிக்காவின் மாசசூசெட்சு மாநிலத்திலுள்ள பிரண்டிசு பல்கலைக்கழகத்தில் வைசுனெர் தனது இளநிலை பட்டப் படிப்பை முடித்தார். 2019 ஆம் ஆண்டு இவருக்கு மைக்கியசு குவாண்டம் பரிசு கிடைத்தது. சார்லசு எச் பென்னட்டு, கில்லசு பிரசார்து, ஆர்தர் ஈகெர்ட்டு, ஆண்டன் செய்லிங்கர் மற்றும் பான் இயான்வெய் ஆகியோருடன் கூட்டாக இப்பரிசு வைசுனெருக்கு வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு கிடைத்த தரவுகளின்படி சிடீபன் யே. வைசுனெர் எருசலேமில் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார் எனத் தெரிகிறது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Shtetl-Optimized » Blog Archive » Stephen Wiesner (1942-2021)".
  2. How the Hippies Saved Physics: Science, Counterculture, and the Quantum Revival, by David Kaiser
  3. Satell, Greg (July 10, 2016). "The Very Strange—And Fascinating—Ideas behind IBM's Quantum Computer". Forbes.
  4. S.J. Wiesner, "Conjugate Coding", SIGACT News 15:1, pp. 78–88, 1983.
  5. Bennett, C.; Wiesner, S. J. (1992). "Communication via one- and two-particle operators on Einstein–Podolsky–Rosen states". Phys. Rev. Lett. 69: 2881. doi:10.1103/PhysRevLett.69.2881. 
  6. Scott, Aaronson (2013). Quantum Computing Since Democritus. Cambridge University Press. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0521199568. https://www.google.com/books/edition/_/jRGfhSoFx0oC?hl=en&gbpv=1&pg=PA127. பார்த்த நாள்: 8 August 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீவன்_வைசுனெர்&oldid=3279209" இலிருந்து மீள்விக்கப்பட்டது