இசுட்ரோன்சியம்-90

இசுட்ரோன்சியம்-90 அல்லது இசுட்ரான்சியம்-90 (ஸ்டிரான்சியம்-90; Strontium-90) என்பது இசுட்ரோன்சியம் தனிமத்தின் கதிரியக்கமுள்ள ஓரிடத்தான் (இலங்கை வழக்கு:சமதானி) ஆகும். இதன் வேதியியல் குறியீடு 90Sr. இது அணுக்கருப் பிளவு மூலம் உருவாகின்றது. அணு ஆயுதங்களில் இருந்தும் அணு விபத்துக்களின் போதும் ஏற்படும் சிதறலில் இவ்வோரிடத்தான் வெளிவிடப்படுகின்றது, இதைத்தவிர அணு ஆலைக் கழிவுகளிலும் உண்டாகின்றது. இசுட்ரான்சியம்-90 இன் அரைவாழ்வுக் காலம் 28.8 ஆண்டுகள்.

இசுட்ரோன்சியம்-90, 90Sr
பொது
குறியீடு90Sr
பெயர்கள்இசுட்ரோன்சியம்-90, Sr-90
நேர்மின்னிகள் (Z)38
நொதுமிகள் (N)52
நியூக்லைடு தரவு
இயற்கையில்
கிடைக்குமளவு
syn
அரைவாழ்வுக் காலம் (t1/2)28.79 ஆண்டுகள்
சிதைவு விளைபொருள்கள்90Y
Decay modes
சிதைவு முறைசிதைவு ஆற்றல் (MeV)
Beta decay0.546
Isotopes of இசுட்ரோன்சியம்
நியூக்லைடுகளின் முழுமையான அட்டவணை

தொழிற்துறையில் கதிரியக்கத் தனிமத்தின் தேவைக்காகவும், மருத்துவத்தில் சிறிய அளவுத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது. இது எலும்புகளைப் பாதிக்கும் ஒரு கதிரியக்கத் தனிமமாக இருப்பதால் புற்றுநோயை உண்டாக்கவல்லது.

உயிரியல் விளைவுகள் தொகு

உயிரியல் தொழிற்பாடு தொகு

இசுட்ரோன்சியம்-90 ஒரு "எலும்பு தேடி" ஆகும். இது காரக்கனிம மாழைகள் வகுப்பைச் சேர்ந்தமையால் கல்சியத்தின் வேதியல் தொழிற்பாட்டை ஒத்து உள்ளது. மாசுற்ற நீர் அல்லது உணவு மூலம் உடலை அடைந்த இசுட்ரோன்சியம்-90 இன் 70 - 80% கழிவகற்றல் மூலம் வெளியேறிவிடுகின்றது, ஒரு வீதமானது குருதியிலும் மெல் இழையங்களிலும் சேர, ஏறத்தாழ எஞ்சியிருக்கும் மிகுதி இசுட்ரோன்சியம்-90 எலும்புகளிலும் என்புமச்சையிலும் படிகின்றது. எலும்புகளில் இதன் தேக்கம் எலும்புப் புற்றுநோயையும் அதை அண்மித்துள்ள இழையங்களில் புற்றுநோயையும் உண்டாக்கும், இதைவிட குருதிப்புற்றுநோயும் உருவாகலாம். இசுட்ரோன்சியம்-90 உடலில் செறிவடைந்துள்ளதா என்பதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அறியலாம்.

சீசியம் (134Cs, 137Cs), அயோடின் (131I) ஓரிடத்தான்களுடன் சேர்ந்து செர்னோபில் அணு உலை விபத்தில் வெளிச்சிதறப்பட்ட மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த கதிரியக்கத் தனிமமாக இசுட்ரோன்சியம்-90 விளங்குகின்றது. கல்சியத்தின் தொழிற்பாட்டை ஒத்து இருப்பதால் பாராதைராய்டு சுரப்பிகளில் உள்ள ஏற்பிகளில் இலகுவில் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவல்லது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Boehm, Bernhard O.; Rosinger, Silke, Belyi, David, Dietrich, Johannes W. (08 2011). "The Parathyroid as a Target for Radiation Damage". New England Journal of Medicine 365 (7): 676–678. doi:10.1056/NEJMc1104982. பப்மெட்:21848480. http://www.nejm.org/doi/full/10.1056/NEJMc1104982. பார்த்த நாள்: 19 August 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்ரோன்சியம்-90&oldid=2743109" இலிருந்து மீள்விக்கப்பட்டது