இசுட்ரோன்சியம் குரோமேட்டு
இசுட்ரோன்சியம் குரோமேட்டு (Strontium chromate) என்பது SrCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[1]
இனங்காட்டிகள் | |
---|---|
7789-06-2 ![]() | |
EC number | 232-142-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24599 |
வே.ந.வி.ப எண் | GB3240000 |
| |
பண்புகள் | |
SrCrO4 | |
வாய்ப்பாட்டு எடை | 203.614 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிறத்தூள் |
அடர்த்தி | 3.353 கி/செ.மீ3 |
0.12 கி/100 மி.லி (15 °செ) 3 கி/100 மி.லி (100 °செ) | |
கரைதிறன் | நீர்த்த அமிலங்கள் மற்றும் அமோனியாவில் கரைகிறது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3118 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் குரோமேட்டு பேரியம் குரோமேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு முறை a
தொகுஇசுட்ரோன்சியம் குளோரைடு மற்றும் சோடியம் குரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது. அல்லது இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் இருகுரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதாலும் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது.
பயன்கள்
தொகு- நிறமிகளில் அரிமானம் தடுப்பியாகப் பயன்படுகிறது.
- மின்வேதியியல் செயல்முறைகளில் கரைசல்களில் சல்பேட்டுகளின் அடர்த்தியைக் கட்டுப்படுத்துகிறது.
- பாலிவினைல் குளோரைடு பிசின்களை நிறமூட்டப் பயன்படுகிறது.
- வானவெடிகள் தயாரிப்பில் பயனாகிறது.
- அலுமினியச் சீவல்களுக்கு மேல்பூச்சாகப் பயன்படுகிறது.
- விமானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் துத்தநாகம், மக்னீசியம், அலுமினியம் மற்றும் உலோகக் கலவைகள் ஆகியனவற்றுக்கு அரிமானத்தைத் தடுக்கும் முதன்மை இணைப்பான் பூச்சாகப் பூசப் பயன்படுகிறது.