இசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம்

இசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம் (Istanbul Atatürk Airport,துருக்கியம்: İstanbul Atatürk Havalimanı) (ஐஏடிஏ: ISTஐசிஏஓ: LTBA) துருக்கியின் இசுதான்புல்லில் அமைந்துள்ள இரு பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதன்மையானதும் பயணிகள் போக்குவரத்தில் துருக்கியின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் ஆகும். நகரின் ஐரோப்பியப் பகுதியான யெசில்கோயில் 1924 இல் திறக்கப்பட்ட இந்த வானூர்தி நிலையம் நகர மையத்திலிருந்து மேற்கே 24 km (15 mi) தொலைவில்[2] அமைந்துள்ளது. 1980இல் துருக்கியின் முதல் அரசுத்தலைவரும் நிறுவனருமான முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் நினைவில் இது அத்தாதுர்க் பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டது. 2012 தரவுகளின்படி ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகள் வந்துசெல்லும் இது உலகின் 20வது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக உள்ளது. பன்னாடுப் பயணிகளின் போக்குவரத்தில் (உள்ளூர்ப் பயணிகளைத் தவிர்த்த) உலகின் 14வது நிலையில் உள்ளது. ஐரோப்பாவில் ஆறாவது பயணிகள் போக்குவரத்து மிகுந்த நிலையமாகவும் விளங்குகிறது.[3][4]

இசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம்

İstanbul Atatürk Havalimanı
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்அரசு வானூர்தி நிலையங்கள் பொது இயக்குநரகம்
இயக்குனர்டிஏவி வானூர்தி நிலையங்கள் சார்வைப்பு
சேவை புரிவதுஇசுதான்புல், துருக்கி
அமைவிடம்யெசில்கோய்
மையம்
உயரம் AMSL163 ft / 50 m
இணையத்தளம்www.ataturkairport.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
17L/35R 3,000 9,843 பைஞ்சுதை
17R/35L 3,000 9,843 பைஞ்சுதை
05/23 2,580 8,465 காடியெடுத்த அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2012)
மொத்தப் பயணிகள்44,998,508
பன்னாட்டுப் பயணிகள்29,717,196
மூலம்: துருக்கி வான்பயண தரவுகள் வெளியீடு[1]

துருக்கியின் குடிசார் பொறியாளர்களின் அவை பட்டியலிட்டுள்ள 50 பொறியியல் சாதனைகளில் இந்த வானூர்தி நிலையக் கட்டமைப்பும் இடம் பெற்றுள்ளது.[5]

மேற்சான்றுகோள்கள் தொகு

  1. "LTBA – Istanbul / Atatürk / International" (PDF). AIP Turkey. Ankara: DHMİ Genel Müdürlüğü. 26 July 2012. part AD 2 LTBA. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  2. EAD Basic
  3. "12 months". Aci.aero. 2013-04-24. Archived from the original on 2016-05-28. பார்க்கப்பட்ட நாள் 2013-04-29.
  4. "12 months". Aci.aero. 2013-04-24. Archived from the original on 2018-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-04-29.
  5. ["The list (துருக்கி மொழி)". Archived from the original on 2013-10-31. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01. The list (துருக்கி மொழி)]

வெளி இணைப்புகள் தொகு