இசுரேலிய இராணுவத் தலைமையகம்
இசுரேலிய இராணுவத் தலைமையகம் அல்லது இராணுவ தலைமையங்களின் பொது அலுவலர் கட்டளை (General Officer Commanding Army Headquarters, எபிரேயம்: זרוע היבשה, Zro'a HaYabasha, படைக்கலம்) என்பது 1998 இல் பல படைகளின் தலைமையகமாகக் காணப்படுகின்றது. இது எபிரேய மொழியில் மாஸி என உத்தியோகப் பூர்வமற்று அழைக்கப்படும். இது கணினிப் பாதுகாப்புப் பிரிவு உட்பட்ட[1] இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் தரைப்படைகளை ஒன்று சேர்க்கிறது. தற்போதைய இசுரேலிய தரைப்படைகளின் அளவானது கிட்டத்தட்ட 125,000 செயலிலுள்ள படைவீரர்களையும் 600,000 நெருக்கடி கால படைவீரர்களையும் கொண்டுள்ளது.
இசுரேலிய இராணுவத் தலைமையகம் | |
---|---|
செயற் காலம் | 1998 |
நாடு | இசுரேல் |
பற்றிணைப்பு | இசுரேலிய பாதுகாப்புப் படைகள் |
சுருக்கப்பெயர்(கள்) | மாஸி (Mazi) |
பிரிவுகளும் கட்டமைப்பும்
தொகுஇது ஐந்து தரைப் போர் நடவடிக்கைப் படைகளைக் குறித்த இராணுவ செயற்பாட்டிற்காகக் கொண்டுள்ளது.
- சார்பியக்கப் படைகள்
- இசுரேலிய காலாட்படை (חיל הרגלים)
- கவசப் படை (חיל השריון)
- சண்டை உதவிப் படைகள்
- இசுரேலிய பீரங்கிப்படைகள் (חיל התותחנים)
- இசுரேலிய பொறியியல் படை (חיל ההנדסה הקרבית)
- இசுரேலிய கள புலனாய்வுப் படை (חיל האיסוף הקרבי)
மேலதிகமாக இன்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது:
- திட்டப் பிரிவு (חטיבת התכנון)
- "தரைப்" பிரிவு (חטיבת יבשה)
- தனிநபர் பிரிவு (חטיבת כוח-אדם)
- தொழில்நுட்பப் பிரிவு (חטיבת הטכנולוגיה)
உசாத்துணை
தொகு- ↑ "IDF to Establish New Cyber Warfare Military Branch". பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)