இசைஞானியார் நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 3 பெண் நாயன்மார்களில், 'ஆதிசைவர்' குலத்தைச் சேர்ந்தவர்.

இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார்[1][2][3]. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.

இசைஞானியார் நாயனார்
பெயர்:இசைஞானியார் நாயனார்
குலம்:ஆதி சைவர்
பூசை நாள்:சித்திரை சித்திரை
அவதாரத் தலம்:ஆரூர் (கமலாபுரம்)
முக்தித் தலம்:திருநாவலூர்

தொன்மம்

தொகு

திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.

 
சுந்தரமூர்த்தி நாயனாரின் குடும்பம்: இடமிருந்து வலமாக சடைய நாயனார் (தந்தை), இசைஞானியார் (தாய்), பரவை நாச்சியார் (மனைவி), சுந்தரர், சங்கிலி நாச்சியார் (மனைவி), நரசிங்கமுனையரைய நாயனார் (வளர்ப்புத் தந்தை).

குருபூசை

தொகு

இசைஞானியார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம்

மேற்கோள்கள்

தொகு
  1. 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). இசை ஞானியார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  2. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=111&pno=184
  3. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைஞானியார்_நாயனார்&oldid=3500814" இலிருந்து மீள்விக்கப்பட்டது