இசை வளர்த்த மேதைகள்

இசை வளர்த்த மேதைகள் பரத முனிவர் தொடங்கி பலர் இருந்துள்ளனர்.

பரத முனிவர்தொகு

பரத முனிவர் உலகின் மிகத் தொன்மையான காலத்தில் தோன்றிய இசை மேதையாகத் திகழ்கிறார்.நாட்டிய சாஸ்திரம் என்ற அவருடைய நூல் அக்கால இசையைப் பற்றிய செய்திகளின் புதையலாக விளங்குகிறது.

திருவள்ளுவர்தொகு

திருவள்ளுவர், திருக்குறள் எனப்படும் ஈடு இணையற்ற நூலைத் தந்துள்ளார். ஈராயிரம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் இன்றும் பல இசைக்கலைஞர்களால் இசை வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆழ்வார்கள்தொகு

ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்கள் விஷ்ணு பகவானைக் குறித்து எழுதிய பாசுரங்கள் அடங்கிய நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும்.

நாயன்மார்கள்தொகு

நாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்கள் சிவனைத் துதித்து பாடிய பாடல்கள் அடங்கிய தேவாரம் , திருவாசகம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளனர்.

புரந்தரதாசர்தொகு

கர்நாடக சங்கீதத்தின் தந்தை எனப்படும் புரந்தரதாசர் இசையைக் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் மற்றும் அடிப்படை கோட்பாடுகளை வகுத்தளித்தார்.

அருணகிரிநாதர்தொகு

அருணகிரிநாதர் 16000 பாடல்கள் அடங்கிய திருப்புகழ் என்ற நூலை வழங்கியுள்ளார்.இவரது பாடல்களில் காணப்படும் சந்தங்கள் ஒரு புதிய வகையில் தாளக்ரமத்தை உருவாக்கின.

முத்துத் தாண்டவர்தொகு

சிவனுடைய தீவிர அடியாரான முத்துத் தாண்டவர் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைப் புகழ்ந்துப் பாடல்கள் இயற்றியுள்ளார்.

சங்கீத மும்மூர்த்திகள்தொகு

தியாகராயர், முத்துச்சாமி, சியாமா சாஸ்திரிகள் கர்நாடக இசை உலகின் மும்மூர்த்திகளாக கருதப்படுகின்றனர். திருவாரூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் பல நூறு பண்களைப் பிரத்தியோக நடையில் உருவாக்கித் தந்துள்ளனர்.

உசாத்துணைதொகு

சித்ரவீணா ரவிகிரண், 'இணையற்ற இன்னிசை', அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை, 2006.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசை_வளர்த்த_மேதைகள்&oldid=2715779" இருந்து மீள்விக்கப்பட்டது